தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு படிப்புகள்

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு படிப்புகள்

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு படிப்புகள்


UPDATED : டிச 17, 2010 12:00 AM

ADDED : டிச 17, 2010 04:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2010 12:00 AM ADDED : டிச 17, 2010 04:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(பி.ஏ.ஆர்.சி.), பலவித ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.


அந்த படிப்புகளின் விவரம்,


பி.ஏ.ஆர்.சி. பயிற்சி பள்ளிகள் நடத்தும் ஒரு வருட(2011-12) ஓரியன்டேஷன் படிப்பு - இது பொறியியல் மற்றும் முதுநிலை அறிவியல் மாணவர்களுக்கானது.


இரண்டு வருட(2011-12) அணுசக்தி ஆற்றல் துறை பட்டதாரி உதவித்தொகை திட்டம் - பொறியியல் மற்றும் இயற்பியல் முதுநிலை மாணவர்களுக்கானது.


இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் உண்டு. பொது பிரிவினருக்கு 26 வயது, ஓ.பி.சி. பிரிவினருக்கு 29 வயது மற்றும் எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு 31 என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைவரும் இந்திய குடிமகன்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படுகிறது. அதேசமயத்தில், பெண்கள் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை ஆன்லைன் அல்லது தபால் முறையில் அனுப்பலாம்.


கேட் மதிப்பெண் அடிப்படையிலான விண்ணப்ப விற்பனை மற்றும் சமர்பித்தலுக்கான கடைசி தேதி 2011, மார்ச் 25 மற்றும் ஆப்லைன் சமர்பித்தலுக்கான கடைசி தேதி 2011,மார்ச் 31.


அதேபோல், 7 பொறியியல் வகைகளில் எழுத்து தேர்வை விரும்புபவர்கள் ஆப்லைனில் விண்ணப்பம் செய்யும் கடைசி தேதி 2011, மார்ச் 18 மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி 2011, மார்ச் 25.


இதுதவிர அறிவியல் வகைகளில் எழுத்து தேர்வை விரும்புபவர்கள், ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி 2011, ஜனவரி 21.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us