தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டனில் பிஎச்.டி. படிப்பிற்கான உதவித்தொகை

பிரிட்டனில் பிஎச்.டி. படிப்பிற்கான உதவித்தொகை

பிரிட்டனில் பிஎச்.டி. படிப்பிற்கான உதவித்தொகை


UPDATED : டிச 20, 2010 12:00 AM

ADDED : டிச 20, 2010 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2010 12:00 AM ADDED : டிச 20, 2010 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு


நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை கவுரவிக்கும் விதமாக, கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, டாக்டர். மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த உதவித்தொகை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித ஜான் கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்(வான்வெளி பொறியியல் மற்றும் ஆற்றல் படிப்புகள்), பொருளாதாரம், சமூக அறிவியல் போன்ற துறைகளில் பிஎச்.டி. ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, உயர்கல்வியில் திறமையுடன் விளங்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


பிரதமர் மன்மோகன் சிங், புனித ஜான் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மற்றும் அதற்கான மேற்பார்வையாளரை கேம்பிரிட்ஜ் பல்கலையில் அடையாளம் காண வேண்டும். இந்த உதவித்தொகையை பெற, விண்ணப்பதாரர்கள் தங்களின் மொழி அறிவு மற்றும் தலைமைத்துவ பண்பை நிரூபிக்க வேண்டும். அதேசமயம் கட்டாயம் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.


இத்தகைய பரீட்சைகளில் தேறிய பின்னர், கல்லூரியால் உதவித்தொகை வழங்கப்படும். பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நேர்முகத்தேர்வு நடைபெற்று, ஏப்ரலில் முடிவுகள் அறிவிக்கப்படும். வாய்ப்பை பெற்று பிரிட்டன் செல்வதற்கு முன்பாக மாணவர்களுக்கு, பயண நடைமுறைகள், பிரிட்டன் விசா மற்றும் பயண ஏற்பாடுகள் போன்ற விஷயங்களில் பிரிட்டிஷ் கவுன்சில் உதவியாக இருக்கும்.


தகுதி - பொருத்தமான துறையில் முதுநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.


ஸ்காலர்ஷிப் மதிப்பு - படிப்பு செலவு, விமானப் பயண செலவு, உதவித்தொகை மற்றும் பிரிட்டன் விசா.


விண்ணப்பிக்கும் கடைசி தேதி - டிசம்பர் 31.


இந்த ஸ்காலர்ஷிப் பற்றி மேலும் விவரம் அறிய www.britishcouncil.org என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us