நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பட்டதாரி பயிற்சியாளர் காலியிடங்கள்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பட்டதாரி பயிற்சியாளர் காலியிடங்கள்
UPDATED : டிச 21, 2010 12:00 AM
ADDED : டிச 21, 2010 01:59 PM
தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற என்.எல்.சி., நிறுவனத்தில் பொது உறவுகள் (பப்ளிக் ரிலேஷன்ஸ் பி.ஆர்.,) பட்டதாரி பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு:
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் கிராஜூவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பிரிவுக்கு விண்ணப்பிக்க 01.11.2010 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் கிராஜூவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க பின் வரும் தகுதிகள் தேவை.
அ. ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஆ. பட்டப்படிப்புக்குப் பின் பப்ளிக் ரிலேஷன்ஸ், மாஸ் கம்யூனிகேஷன், ஜர்னலிசம் ஆகிய ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பைக் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
இ. ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் ஏதாவது இரண்டு மொழியில் எழுத, பேச மற்றும் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த மூன்று மொழிகளில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
ஈ. படிப்பை முடித்த பின் பி.ஆர்., துறையில் அனுபவப்பூர்வமான திறமை பெற்றிருப்பதும் தேவைப்படும்.
