மாநில பல்கலைக்கழகங்களை வளப்படுத்த வேண்டும்: அன்சாரி
மாநில பல்கலைக்கழகங்களை வளப்படுத்த வேண்டும்: அன்சாரி
UPDATED : டிச 21, 2010 12:00 AM
ADDED : டிச 21, 2010 05:47 PM
மாநில பல்கலைக்கழகங்களை தரப்படுத்துவதன் மூலமே, நாட்டின் உயர்கல்வியை மேம்படுத்த முடியும் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உயர்கல்வியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்க வேண்டுமெனில், மாநில பல்கலைக்கழகங்கள் அதிக நிதியளிக்கப்பட வேண்டும், அதன் உள்கட்டமைப்புகள் மேம்பட வேண்டும் மற்றும் அவற்றின் பாடத்திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் துணை ஜனாதிபதி பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது, "மாநில பல்கலைகளே அதிக மாணவர் சேர்க்கையை பெறுகின்றன. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும்போதே, நாட்டின் வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவிற்கு சாத்தியப்படுகிறதென்றால், மாணவர் சேர்க்கையை உயர்கல்வியில் இரட்டிப்பாக்கும் போது நாம் பல வகையிலும் மேம்படுவோம். மேலும் தொழிற்கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், வேலை பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் நுழைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கலாம்" என்றார்.
