தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தில்... தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் அரசு உத்தரவு!

ஆங்கிலத்தில்... தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் அரசு உத்தரவு!

ஆங்கிலத்தில்... தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் அரசு உத்தரவு!


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு, ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.


தமிழில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க, அரசு சமீபத்தில் உத்தர விட்டுள்ளது. இதன்படி 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, செப். 30 ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு ஆங்கிலத்தில் உள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, ஐகோர்ட்டில் தமிழ், தமிழ் வழி பொறியியல் படிப்பு... என, அரசு ‘எதிலும் தமிழ்’ என்ற கொள்கையை புகுத்தி வருகிறது. ஆனால், அரசின் உத்தரவுகளில் இன்னும் ஆங்கில ஆதிக்கமே உள்ளது.


தமிழ் வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்; இதை பலர் பின்பற்றுவதில்லை; இவர்கள் மீது என்ன நடவடிக்கை? என்பது குறித்து, அரசு குறிப்பிடவில்லை. தமிழில் கையெழுத்திட நாங்கள் கூறும் அறிவுரைகளை, மற்ற துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us