டிச. 31 க்குள் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு
டிச. 31 க்குள் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு
UPDATED : டிச 22, 2010 12:00 AM
ADDED : டிச 22, 2010 12:45 PM
அ நிறம் | அளவு
தேனி: ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை டிச. 31 க்குள் தயாரித்து அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு செய்யப்பட உள்ளனர்.
பதவி உயர்வு பெற தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 2011 ஜன. 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பதவி உயர்வு பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது. இப்பட்டியலை டிச. 31க்குள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
