தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி மைய அங்கீகாரம் ரத்து: மாணவர்கள் கவலை

ஆசிரியர் பயிற்சி மைய அங்கீகாரம் ரத்து: மாணவர்கள் கவலை

ஆசிரியர் பயிற்சி மைய அங்கீகாரம் ரத்து: மாணவர்கள் கவலை


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேனியைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் பயிற்சி மையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு படித்த மாணவர்கள், சென்னையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.


தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த உமையாள் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 100 மாணவர்கள் படித்து வந்தனர். இம்மாணவர்கள் நேற்று சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் திடீரென குவிந்தனர். அங்கு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.


புகார் மனுவில் மாணவர்கள் கூறியிருப்பதாவது: உமையாள் ஆசிரியர் பயிற்சி மையத்தில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டில் தலா 50 மாணவர்கள் வீதம் மொத்தம் 100 மாணவர்கள் படிக்கிறோம். அக்டோபர் மாதம் உமையாள் ஆசிரியர் பயிற்சி மையத்தின் என்.சி.டி.இ., அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், அக்கல்லூரியில் படித்தால் மாணவர்களின் சான்றிதழ் செல்லாது என அறிந்தோம்.


கல்லூரியின் அறக்கட்டளைக்கு சொந்தமாக இடம் இல்லை, 30 ஆண்டிற்கான குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது, ஆசிரியர் பயிற்சி மையம் திட்டமிட்ட இடத்தில் சொந்தக் கட்டடம் கட்டவில்லை, கல்லூரியின் பெயரிலிருந்த நிரந்தர வைப்புத் தொகையை காலி செய்து விட்டனர். இதனால், பயிற்சி மையத்தின் அங்கீகாரத்தை என்.சி.டி.இ., ரத்து செய்துவிட்டது. வாடகை பாக்கி செலுத்தாததால், இடத்தின் உரிமையாளர் கல்லூரி நடைபெற்ற இடத்தை காலி செய்து பொருட்களை வெளியே தூக்கிப் போட்டு விட்டார்.


உமையாள் ஆசிரியர் பயிற்சி மையத்தின் அங்கீகாரம், கடந்த ஜூலை 29ம் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டதாக பெங்களூரு என்.சி.டி.இ., தெரிவித்தது. கல்லூரி நிர்வாகத்திடமிருந்து மாணவர்கள் செலுத்திய பணத்தை தமிழக அரசு தான் பெற்றுத் தர வேண்டும். மாணவர்களின் மீதியுள்ள படிப்பிற்கும் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என்.சி.டி.இ.,யில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இயக்குனரை சந்தித்த ஒரு மாணவரின் பெற்றோர் முருகன் கூறியதாவது: ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் எங்களிடம், ‘உமையாள் ஆசிரியர் பயிற்சி மையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது உண்மை தான். கல்லூரி நிர்வாகத்தின் மீது தான் தவறு உள்ளது. நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். மாணவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம். அங்கு படித்த மாணவர்களை, வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவதா, ஒரே மாவட்டத்திற்கு மாற்றுவதா என பரிசீலித்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் இப்பிரச்னையில் முடிவெடுத்து விடுவோம்’ என தெரிவித்தார்.


உமையாள் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என பலர் உள்ளனர். அவர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றக்கூடாது. தேனியிலேயே வேறு கல்லூரியில் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இயக்குனரின் பதிலால், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முருகன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us