தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனிதவள மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு

மனிதவள மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு

மனிதவள மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 03:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 03:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில அரசால் நடத்தப்படும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம்(என்.எஸ்.டி.சி.), 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பயிற்சியளிக்க, எம்பவர் பிரகதி வொகேஷனல் மற்றும் ஸ்டாபிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வை எட்டியுள்ளது.


இந்த கூட்டு முயற்சியானது, நடுநிலை பங்களிப்பு அடிப்படையிலானது. இதில் 10% பங்கு அல்லது மற்றுமொரு 16% பங்களிப்பிற்கு வாய்ப்புண்டு. என்.எஸ்.டி.சி. தரப்பில் இதுகுறித்து கூறுகையில், நடுநிலை பங்களிப்பின் மூலமாகவே இந்த ஒத்துழைப்பு சம்பந்தமாக எங்களால் சிறந்த பங்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் எதிர்காலத்தில் நன்கு பயிற்சிபெற்ற அதிக மனிதவளம் தேவைப்படும்.


மரபுசாரா துறைகளில் தேவைப்படும் மனிதவளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எங்களின் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்தகைய பொது - தனியார் ஒத்துழைப்பானது(பி.பி.பி.), நிதி அமைச்சகத்தால், தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்கும்பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us