தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அரசாணை எதிர்த்து மனு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அரசாணை எதிர்த்து மனு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அரசாணை எதிர்த்து மனு


UPDATED : டிச 23, 2010 12:00 AM

ADDED : டிச 23, 2010 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2010 12:00 AM ADDED : டிச 23, 2010 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை, ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த மணலியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது பாரபட்சமானது. ஆங்கிலம், தமிழ் வாயிலாக கல்லூரிகள், பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், கல்வித் தகுதியை ஏராளமானோர் பெற்றுள்ளனர்.


குறிப்பிட்ட மொழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும். மாநில மக்கள் அனைவரையும் ஒரே சமமாக பாவிக்க வேண்டும். அவர்களை வேறுபடுத்தக் கூடாது. ஆங்கில வழியில் படித்து பட்டங்களை நான் பெற்றுள்ளேன். தற்போதைய அரசாணையால் நான் பாதிக்கப்படுகிறேன். தமிழ் வழி அல்லாமல் பட்டப் படிப்பு முடித்தவர்களும் பாதிக்கப்படுவர். எனவே, கடந்த செப்டம்பர் 30ம் தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us