UPDATED : டிச 25, 2010 12:00 AM
ADDED : டிச 25, 2010 04:48 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைத்தூர கல்வி திட்டத்தின் கீழ் டிச., மாத தேர்வுக்கான ஹால்டிக்கெட் பொள் ளாச்சி கல்வி மையத்தில் வழங்கப்படுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைத்தூர கல்வி திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி மையத்தில் பாடம் கற்பிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி தேர்வுகள் பொள்ளாச்சி என். ஜி.எம்., கல்லூரியில் நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட் நேற்றும் (24ம் தேதி) மற்றும் இன்றும் (25ம் தேதி) வழங்கப்படுகிறது. மாணவர்கள், பொள்ளாச்சி கல்வி மையத்தில் நேரிடையாக பெற்று கொள்ளலாம். இத்தகவலை திட்ட அலுவலர் சேகர் தெரிவித்தார்.
