தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவப் படிப்பு வாய்ப்புகள்

மருத்துவப் படிப்பு வாய்ப்புகள்

மருத்துவப் படிப்பு வாய்ப்புகள்


UPDATED : டிச 27, 2010 12:00 AM

ADDED : டிச 27, 2010 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2010 12:00 AM ADDED : டிச 27, 2010 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

12ம் வகுப்புப் படிப்பைச் சேர்க்கைத் தகுதியாகக் கொண்ட மருத்துவம் சார்ந்த துறைப் படிப்புகளில் முதலில் நிற்பது, ஐந்தரை ஆண்டு (நான்கரை ஆண்டு கல்லூரிப் படிப்புடன் ஒரு ஆண்டு மருத்துவமனையில் உள்ளிருப்புப் பயிற்சி) படிப்பான எம்.பி.பி.எஸ்., தொடர்ந்து வருபவை: 


பல்மருத்து வத்துக்கான பி.டி.எஸ்.,(5 ஆண்டு), பி.எஸ்.சி., நர்சிங் (4 ஆண்டு), பி.பார்ம்., பி.பி.டி., (4 ஆண்டு), பணிசார்ந்த பிணி மருத்துவத்துக்கான பி.ஓ.டி., (4 ஆண்டு) ஆகியவை. மேலும் உள்ள, AYUSH என்று கவர்ச்சியாகச் சுருக்கி அழைக்கப்படும் ஆயுர்வேதா (A), யோகாவும் இயற்கை மருத்துவமும்(Y), யுனானி (U), சித்தா (S), ஹோமியோபதி (H) ஆகியவை, மாற்று மருத்துவங்கள் (Alternative medicines) என அழைக்கப்படுகின்றன.


இவை அனைத்துக்கும் பொதுவான கல்வித் தகுதி: பிளஸ்2 வில் இயற்பியல், வேதியியல் உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல் இருதாள்களும்)


நர்சிங்
இவற்றுள் செவிலியம்(நர்சிங்) படித்தவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமின்றி உலகளவில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் 5 லட்சம் செவிலியர் தேவைப்படுகிறார்கள்.


நம்மவர்களைப்போல, செவிலியர் தொழிலை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம்பிரித்துப் போற்றியவர்கள் வேறு எங்கும் இருக்க முடியாது. மருத்துவப்பணியை வரையறை செய்த வள்ளுவர், நோயுற்றவன், மருத்துவன், மருந்து அதைச் செலுத்தும் செவிலி என நான்கு பகுதிகளைக் கொண்டது மருத்துவம் என்ற பொருளில், ""உற்றவன் தீர்ப்பான், மருந்து உழைத் செல்வானென இப்பால்நாற் கூற்றே மருந்து&'&' எம்.பி.பி.எஸ்., போட்டிமிகுந்த எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நாடு முழுவதிலும் சுமார் 250 கல்லூரிகளும் 30,000 இடங்களும் மட்டுமே உள்ளன.


குறிப்பாகத் தமிழகத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் இயங்கும் கல்லூரிகள் மொத்தம் 23. (அரசுக்கல்லூரிகள் 17, தனியார் கல்லூரிகம் 6) இவற்றில் உள்ள இடங்கள் 2505(அரசு 1945, தனியார் 560). இவை தவிர நிகர்நிலை உள்ளிட்ட வேறுசில பல்கலைக்கழகங்களிலும் இடங்கள் உண்டு.


தமிழகத்திலுள்ள எல்லா அரசு
மருத்துவக்கல்லூரிகளில் மொத்த இடங்களும், தனியார்க்கல்லூரிகளில் ஒருபகுதி இடங்களும் தமிழக அரசின் ஒற்றைச்சாளரச் சேர்க்கை முறையில் நிரப்பப்படுகின்றன. 2006ம் ஆண்டிலிருந்து நுழைவுத்தேர்வு அகற்றப்பட்டுவிட்டதால், 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் (உயிரியல்:100, இயற்பியல்:50, வேதியியல்:50, ஆகமொத்தம் 200 மதிப்பெண்கள்) தர வரிசை செய்யப்பட்டு, கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். வகுப்புவாரி இடஒதுக்கீடும்(69%) சிறப்பு ஒதுக்கீடுகளும் உண்டு.


அரசுக்கல்லூரிகளில் மட்டுமே படிப்புச் செலவு குறைவு அரசுக்கல்லூரி இடங்களில் 15% வரை அகில இந்திய அளவில் ஏ.ஐ.பி.எம்.டி.,
என்ற நுழைவுத்தேர்வு மூலம் மத்திய அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆகவே மருத்துவப்படிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவைகள் உள்ள வேறு வாய்ப்புகளையும் அறிந்து முயற்சி செய்வது நல்லது.


வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு
ரஷ்யா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா முதலிய பலநாடுகளில் நம் மாணவர்கள் மருத்துவம் படிக்க வசதியுண்டு. உள்நாட்டுத் தனியார்க் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஆவதைவிட. இந்த வெளிநாட்டுப் படிப்புகளுக்குச் செலவு கணிசமாகக் குறையலாம் என்பது இதில் உள்ள பெரும் நன்மை ஆயின் சில எச்சரிக்கைகளும் தேவை.


1. படிக்கும் வெளிநாட்டுப் படிப்ப, நம் நாட்டில் மருத்துக் கவுன்சிலால் (எம்.சி.ஐ.,) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக, வெளிநாட்டுக் கல்லூரி எதிலும்சேருவதற்கு முன்னால் அதற்கான தகுதிச்சான்றிதழை (Eligibility certificate) எம்.சி.ஐ., யிலிருந்து பெற வேண்டும்.


2. அந்த வெளிநாட்டுப் படிப்பை முடித்தபிறகு நமது நாட்டில் தொடர்ந்து பயிலவும் பணி செய்யவும் தகுதிபெற National board of Examinations நடத்தும் வடிக்கும் தேர்வு (Screening Test) எழுதித் தேற வேண்டும்.


நாடுதழுவிய தேர்வுகள்
தமிழக அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பும் மருத்துவக்கல்லூரி இடங்களில் தமிழகம் தவிர்த்த மற்ற மாநில மாணவர்கள் சேர முடியாது இதேபோல், பிறமாநிலங்களின் இத்தகைய இடங்களில் தமிழக மாணவர்கள் உட்பட வேறுமாநில மாணவர்கள் சேர முடியாது. ஆனால் நாட்டின் சில மருத்துவக் கல்லூரிகளில் நாடு தழுவிய அளவில் மாணவர்கள் நுழைவுத்தேர்வுகள் மூலம் சேர்க்கப்படுகிறார்கள்.


அவற்றில் உள்ள வாய்ப்புகளைத் தமிழக மாணவர்கள் மறந்துவிடக் கூடாது. அவற்றில் மிக முக்கியமானது முன்பே குறிப்பிடப்பட்ட ,15% மருத்துவ பல்லியல் இடங்களுக்கான ஏ.ஐ.பி.எம்.டி., (அல்லது பி.எம்.பி.டி.,) மற்றவற்றுள் சில எய்ம்ஸ்., டில்லி; ஏ.எப்.எம்.சி., புனே; ஜிப்மர், புதுச்சேரி, சி.எம்.சி., வேலூர் ஆகியவை.


பேரா. ப.வே.நவநீதகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us