தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடற்படையில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பணியிடங்கள்

கடற்படையில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பணியிடங்கள்

கடற்படையில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பணியிடங்கள்


UPDATED : டிச 28, 2010 12:00 AM

ADDED : டிச 28, 2010 03:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2010 12:00 AM ADDED : டிச 28, 2010 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற்படையில் செய்லர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் 130 ஆவது பேட்ஜிற்கான ஆர்டிபைசர் அப்ரென்டிஸ்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்குத் திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு
இந்திய கடற் படையின் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.08.1991 முதல் 31.07.1994க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
இந்திய கப்பல் படையின் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 அளவிலான படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய 2 பாடங்களில் சராசரியாக குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் வேதியியல், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தையும் படித்திருக்க வேண்டும்.


உடல் தகுதி
ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளுடன் சில குறைந்தபட்ச உடற் தகுதிகளும் தேவைப்படுகிறது. உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.


தேர்ச்சி முறை
இந்திய கப்பல் படையின் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பிரிவிற்கு எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனைத் தேர்வு, உடல் தகுதி தேர்வு என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அரக்கோணம், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பயிற்சி எப்போது ?
ஆர்டிபைசர் அப்ரென்டிஸ்
பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் வரும் ஆகஸ்ட் 2011 முதல் ஐ.என்.எஸ்., சில்காவில் 9 மாதங்களுக்கும் அதன் பின்னர் நேவல் டிரெய்னிங் அகாடமியிலும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி ?
இந்திய கடற் படையின் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது நுழைவு முறை, எழுத்துத் தேர்வு மையம், பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண் சதவிகிதம்ஆகியவற்றை தவறாமல் குறிப்பிடவும்.


விண்ணப்பத்துடன் கூடுதலாக ஒரு வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை இணைப்பதையும், அதன் பின்னர் உங்கள் பெயரைக் குறிப்பிடுவதனையும் உறுதிப்படுத்தவும். புகைப்படத்தின் பிண்ணணி நீல நிறமாக இருக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 15.01.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி:
POST BOX NO: 476,
Gol Dal Khana,
GPO, New Delhi - 110001.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us