தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி

கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி

கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி


UPDATED : டிச 29, 2010 12:00 AM

ADDED : டிச 29, 2010 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2010 12:00 AM ADDED : டிச 29, 2010 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் முதல் தலைமுறையாக பட்டம் படிக்கும் இன்ஜினியரிங் மற்றும் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை, சுயநிதி கல்லூரிகளுக்கு வழங்குவதில் தாமதமாகி வருகிறது. இதனால், இக்கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டும் என, கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன.


தமிழகத்தில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த பின், இன்ஜினியரிங் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதற்கேற்றாற்போல், தமிழகத்தில் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளும், இரு மடங்காக அதிகரித்தது.


இவற்றில், 65 சதவிகித சீட் வரை, அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் ஏராளமான சீட், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது.


இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடப்பு கல்வியாண்டில், "தமிழகத்தில் இருந்து முதல் தலைமுறையாக பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்&' என, அறிவிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மாணவர்களும், இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் கொண்டனர். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் போதே, இவர்கள் முதல் தலைமுறை உதவித்தொகைக்கான சான்றிதழ்களை பெற்று வர அறிவுறுத்தப்பட்டது.


அதாவது, தம் குடும்பத்தினர் யாரும், பட்டப்படிப்பு வரை படிக்கவில்லை என்ற சான்றிதழ், தாசில்தார் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கும், கல்வி உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாய் கழித்து, மீதமுள்ள கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டது.


சுயநிதி கல்லூரிகளும், தங்களது கல்விக்கட்டணத்தில் 20 ஆயிரம் ரூபாயை கழித்து, மாணவர்களை சேர்த்துக் கொண்டன. கல்லூரி துவங்கி, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், மாணவர்களுக்கான உதவித்தொகை கல்லூரிகளுக்கு, அரசு வழங்கவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களை 20 ஆயிரம் ரூபாய் செலுத்தும் படி, கட்டாயப்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது: தமிழக அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஏராளமான ஏழை, எளிய பெற்றோர், தங்களது தகுதியை மீறி, தம் குழந்தைகளை சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். அரசு நிர்ணயித்த 32 ஆயிரத்து 500 ரூபாய் அல்லது 40 ஆயிரம் ரூபாய் என்ற கட்டணத்தை, பெரும்பாலான கல்லூரிகள் கடைபிடிக்கவில்லை. 60 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.


கல்லூரி வசூலிக்கும் தொகையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை கழித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் உதவித்தொகை இன்னும் வழங்கப்படாததால், கல்விக்கட்டணத்தில் கழித்த 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக செலுத்த, கல்லூரி நிர்வாகங்கள் வற்புறுத்தி வருகின்றன. அரசின் உத்தரவை நம்பி சேர்த்த ஏழை, எளிய மக்களுக்கு, இது பேரிடியாக உள்ளது. உடனடியாக இதுகுறித்து தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us