தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமிர்தா பல்கலையில் வளாக நேர்காணல்

அமிர்தா பல்கலையில் வளாக நேர்காணல்

அமிர்தா பல்கலையில் வளாக நேர்காணல்


UPDATED : டிச 30, 2010 12:00 AM

ADDED : டிச 30, 2010 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2010 12:00 AM ADDED : டிச 30, 2010 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: எட்டிமடை அமிர்தா பல்கலையில் 2011ம் ஆண்டுக்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.


பல்கலையில் கடந்த 8ம் தேதி நடந்த வளாக வேலைவாய்ப்பு முகாமில் 1224 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 96 சதவீத மாணவர்கள் இரண்டுக்கும் மேலான வேலைவாய்ப்பை பெற்றனர். கேடர்பில்லர், ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட், நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், தெர்மேக்ஸ், டொயோட்டா, போர்டு, டைட்டன், சாலிட்டன் டெக்னாலஜிஸ், காக்னிசன்ட், எச்.பி, எல் அண்ட் டி, விப்ரோ போன்ற பல நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளன. மேலும், பல நிறுவனங்கள் வளாக வேலை வாய்ப்பு முகாமிற்கு வரவுள்ளன.


நிறுவன மேலாண்மை மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குனரான பேராசிரியர் பரமேஸ்வரன் கூறுகையில், “மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்லாது கம்ப்யூட்டர், உரைநடை, கணிதம் போன்றவற்றிலும் சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறோம். உலகின் சிறந்த பல நிறுவனங்கள் மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலை வாய்ப்பு அளிக்கின்றன,” என்றார்.


பொறியியல் மட்டுமல்லாது வணிக மேலாண்மை மாணவர்களும் வளாக தேர்வில் பங்கேற்றனர். பி அண்ட் ஜி., தாமஸ் குக், பயோடா, ஏஸியன் பெயின்ட்ஸ், கேஸ்ட்ரால், பியூச்சர் குரூப், யு.எஸ்.இ எக்சேச்ஞ், விப்ரோ, கன்சல்டிங் சர்வீசஸ், கோடக் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், ஹேவல்ஸ் இண்டியா லிமிடெட், போன்ற வணிக நிறுவனங்கள் வளாக வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us