தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதில் புதிய நடைமுறை

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதில் புதிய நடைமுறை

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதில் புதிய நடைமுறை


UPDATED : ஜன 01, 2011 12:00 AM

ADDED : ஜன 01, 2011 04:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2011 12:00 AM ADDED : ஜன 01, 2011 04:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதன்படி, பொறியியல் கல்லூரிகளில் நேரடி ஆய்வு நடத்தப்படாது. பொறியியல் கல்லூரிகள் ஒரே ஆசிரியரை, ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக காட்டுவதை தடுக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 165 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பல்கலைக் கழகம் துவக்கப்பட்டு முதலாம் ஆண்டில், அண்ணா பல்கலைக் கழக நடைமுறைகளை பின்பற்றி வந்தநிலையில், பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காக புதிய நடைமுறைகளை புகுத்தத் துவங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதில் புதிய நடைமுறைகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.


பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் முன், அக்கல்லூரியில் பல்கலைக் கழக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்துவர். கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவை நடத்துவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இருக்கின்றனரா என ஆய்வு செய்து அதனடிப்படையில் இணைப்பு வழங்கப்படும். தற்போது, இணைப்பு வழங்குவதற்காக பொறியியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவதில்லை என சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.


இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள், கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வுக்கூட வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை என தங்களைப் பற்றிய முழு விவரங்களையும், வீடியோ ஆதாரங்களுடன் பல்கலைக்கு வழங்க வேண்டும். அவை பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.


மாணவர்கள் அந்தத் தகவல்களை பார்த்து, அதனடிப்படையில் தங்களுக்கு பிடித்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்கலாம். அவ்வாறு படிக்கும்போது, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி பல்கலைக் கழகத்திற்கு வழங்கியுள்ள தகவல்களின்படி, கட்டடங்கள், வகுப்பறைகள், ஆசிரியர்கள், ஆய்வுக் கூடம் இல்லை என தெரியவந்தால், பல்கலைக்கு புகார் செய்யலாம். மாணவர்களிடமிருந்து புகார் வரும்பட்சத்தில், பல்கலைக் கழகம், சம்பந்தப்பட்ட கல்லூரிக்குள் நுழைந்து ஆய்வு நடத்தும். அதில், மாணவர்களின் புகார் உண்மை என தெரியவந்தால், கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும்.


வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்கவும் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, துணைவேந்தர் தங்கராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், ‘பல்கலைக் கழகம் ஆசிரியர்களின் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், அனைத்து ஆசிரியர்களுக்கும், பல்கலை ஆசிரியர் அடையாள எண் வழங்கவும் முடிவு செய்துள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களும், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை, ஜனவரி 14ம் தேதிக்குள் பல்கலைக்கு அனுப்ப வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us