முதன் முதலாக...ஏர்கிராப்ட் டெக்னாலஜி மற்றும் மெயின்டெனன்ஸ்
முதன் முதலாக...ஏர்கிராப்ட் டெக்னாலஜி மற்றும் மெயின்டெனன்ஸ்
UPDATED : ஜன 04, 2011 12:00 AM
ADDED : ஜன 04, 2011 03:00 PM
இந்தியாவில் முதல் முறையாக பி.டெக்., (ஏர்கிராப்ட் டெக்னாலஜி மற்றும் மெயின்டெனன்ஸ்) என்ற புதிய படிப்பு பெங்களூருவில் வரும் கல்வியாண்டில் (2011, ஜன.) தொடங்கப்பட உள்ளது. நாட்டில் அதிகளவிலான மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனமான இக்னோ தான், இந்த படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இது தொலைநிலைக் கல்வி முறையில் இல்லாமல், நேரடி வகுப்பாக நடத்தப்படுகிறது.
இந்தப் படிப்புக்கு துவக்கத்தில் சில ஆண்டுகளுக்கு, டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டும் அட்மிஷன் வழங்கப்பட உள்ளது. இந்த படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு விமானத்துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்று இக்னோவின் பெங்களூரு கல்வி மைய இயக்குனர் சுதிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் விமானப் பணியாளர்களின் தேவை உள்ளது என்று விமானத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பு 4 ஆண்டு படிப்பு. 8 செமஸ்டர்கள் உள்ளன. 33 தியரி பாடங்கள் மற்றும் 14 செய்முறை பாடங்களும் உள்ளன. உலகத்தரத்தில் செய்முறை பயிற்சி வழங்குவதற்காக, இக்னோ நிறுவனம், பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் 5 கோடி மதிப்பிலான நவீன ஆய்வகத்தை அமைக்க உள்ளது.
தகுதிகள்
இந்தப் படிப்புக்கு டிப்ளமோ படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு கட்டணம்
இந்த படிப்பில் சேருபவர்களுக்கு, ஒரு வருடத்துக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு 29 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். வகுப்புகள் வார நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதனால் வேலைபார்க்கும் மாணவர்கள் தங்களுடைய பணியை தொடர்ந்து பார்க்கலாம்.
தொடர்புக்கு: 080 2665 4747, 2665 7376 மற்றும் www.ignourcblr.in
