அட்ரிஷனைக் குறைக்க ஐ.டி., நிறுவனங்கள் விதிக்கும் புதிய கெடு
அட்ரிஷனைக் குறைக்க ஐ.டி., நிறுவனங்கள் விதிக்கும் புதிய கெடு
UPDATED : ஜன 05, 2011 12:00 AM
ADDED : ஜன 05, 2011 12:10 PM
ஐ.டி., நிறுவனங்களுக்கு இருக்கும் முக்கியமான சவால் அட்ரிஷன் எனப்படும் ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவதுதான். இன்றைய பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் இந்த விகிதம் 14 முதல் 17 சதவிகிதமாகவும், சிறிய மற்றும் நடுத்தர ஐ.டி., நிறுவனங்களில் இந்த விகிதம் 25 முதல் 30 சதவிகித மாகவும் உள்ளது.
ஐ.டி., நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் பணியில் இருந்து விலக ஒரு மாத கால முன்னறிவிப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்த கால அவகாசத்திற்குள் ஐ.டி., நிறுவனம் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்குத் திணறி வருவது கண்கூடாகத் தெரிந்தது.
இதனால் இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான நிபந்தனைகளை அதிகப்படுத்தியுள்ளன. இந்தப் புதிய நிபந்தனைகளின்படி ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இனி பணியிலிருந்து விலகு வதாக இருந்தால் மூன்று மாத கால முன்னறிவிப்பின் பெயரிலேயே விலக முடியும். ஐ.பி.எம்., கேப்ஜெமினி, அக்செஞ்சர், காக்னிசன்ட், ஐகேட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் புதிய விதிமுறையை சமீப காலத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளன.
ஐ.டி., நிறுவனங்களின் இந்தப் புது விதிமுறையினால் வளர்ச்சியடைந்து வரும் ஐ.டி., சந்தையில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்று இந்த நிறுவனங்களின் எச்.ஆர்., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
