தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பழநி கோவில் நிதியில் கல்லூரி துவக்கும் திட்டம் இல்லை’

‘பழநி கோவில் நிதியில் கல்லூரி துவக்கும் திட்டம் இல்லை’

‘பழநி கோவில் நிதியில் கல்லூரி துவக்கும் திட்டம் இல்லை’


UPDATED : ஜன 07, 2011 12:00 AM

ADDED : ஜன 07, 2011 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2011 12:00 AM ADDED : ஜன 07, 2011 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: “பல்கலையோ, பொறியியல் கல்லூரியோ, பழநி கோவில் நிதியில் இருந்து ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை,” என அறநிலையத்துறை ஆணையர் சம்பத் தெரிவித்தார்.


பழநி கோவில் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது: பழநி கோவில் இரண்டாவது ரோப் காருக்கான வரைபடங்களை, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். அதில் சிலவற்றுக்கு மட்டும் அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.


மேலும் சில வரைபடங்களுக்கு ஒப்புதல் அளித்த பின், இரண்டாவது ரோப் கார் அமைக்கும் பணிகள் துவங்கும். பழநி கோவில் நிதியில் இருந்து பல்கலைக்கழகமோ, பொறியியல் கல்லூரியோ, சித்த மருத்துவக் கல்லூரியோ ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார். அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்ரமணியம், இணை ஆணையர் ராசமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us