UPDATED : ஜன 10, 2011 12:00 AM
ADDED : ஜன 10, 2011 01:29 PM
ஐதராபாத்திலுள்ள விவசாய நீட்டிப்பு மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனம், ஜெய்ப்பூரிலுள்ள விவசாய சந்தைப்படுத்தலுக்கான சவுத்ரி சரண்சிங் தேசிய கல்வி நிறுவனம் மற்றும் ஐதராபாத்திலுள்ள விவசாய ஆராய்ச்சி மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனம் ஆகிய 3 கல்வி நிறுவனங்களால், விவசாய வணிக மேலாண்மையில் முதுநிலை படிப்புகளின் சேர்க்கைக்காக, மார்ச் 27ம் தேதி நடைபெறும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜெட் - ஏ.பி.எம். 2011 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், குழு கலந்துரையாடல், தனிப்பட்ட நேர்முகத்தேர்வு, கட்டுரை சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள்.
தகுதி: விவசாயம், விவசாய வணிக மேலாண்மை, வர்த்தக விவசாயம், விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு, விவசாய பொறியியல், விவசாய தகவல்-தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சூழல் பொறியியல், மீன்வளம், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல் பொறியியல், காடு வளம், செடிகள் வளர்ப்பு, பட்டு வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.சி.ஏ.ஆர்/யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற 4 வருட படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை www.manage.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பெறலாம். இதுபற்றி விரிவான விவரங்கள் அறிய www.jetabm.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
