தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள இன்ஜினியரிங் காலியிடங்கள்

எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள இன்ஜினியரிங் காலியிடங்கள்

எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள இன்ஜினியரிங் காலியிடங்கள்


UPDATED : ஜன 10, 2011 12:00 AM

ADDED : ஜன 10, 2011 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2011 12:00 AM ADDED : ஜன 10, 2011 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் போன்றவற்றிற்காக பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்ற எஸ்.எஸ்.சி., என்பதை நாம் நன்கு அறிவோம். தற்போது எஸ்.எஸ்.சி., சென்ட்ரல் வாட்டர் கமிஷன் மற்றும் கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் துறைகளுக்காக 160 இளநிலை இன்ஜினியர்களைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



என்னென்ன பிரிவுகள்
எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள இன்ஜினியரிங் பணி வாய்ப்புகளின் கீழ் சிவில் பிரிவில் 99 காலிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 43 காலியிடங்களும், கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் 18 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.



வயது வரம்பு
சென்ட்ரல் வாட்டர் கமிஷனுக்காக எடுக்கப்படும் இளநிலை இன்ஜினியரிங் பணிப் பிரிவுகளான சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 31.01.2011 அன்று 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் துறைக்காக எடுக்கப்படும் இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01. 2011 அன்று 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



கல்வித் தகுதி
சென்ட்ரல் வாட்டர் கமிஷனுக்கான இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் அல்லது மெக்கானிகல் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி துறைக்கான இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பிற்கு நிகரான படிப்பை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.



தேர்ச்சி முறை
எஸ்.எஸ்.சி.,யின் இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, இதன் பின்னர் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பக் கட்டணம்
இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.100/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் இதனை அஞ்சலகத்தில் 'சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப்' மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் சலான் மூலமாகவோ அல்லது ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் வசதியின் மூலமாகவோ ஆன்லைனிலேயே செலுத்தலாம்.



விண்ணப்பிக்கும் முறை
எஸ்.எஸ்.சி.,யின் இளநிலை இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு ஆன்லைன் அல்லது தபால் ஆகிய இரு முறைகளில் ஏதாவது ஒன்றில்  விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.



முக்கிய தேதிகள: விண்ணப்பங்களை ஆன்லைன் அல்லது தபால் முறையில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.01.2010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us