தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்புகள்

பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்புகள்

பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்புகள்


UPDATED : ஜன 10, 2011 12:00 AM

ADDED : ஜன 10, 2011 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2011 12:00 AM ADDED : ஜன 10, 2011 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நான்கு சக்கர சொகுசு கார்களின் வகையில் பி.எம்.டபிள்யூ., கார்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். பெரும்பாலான இன்றைய திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் போன்ற வி.ஐ.பி.,க்களின் கார்கள் இந்த வகையானது என்பது நாம் அறிந்ததே. சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனம் இந்தியாவில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.


இந்த ஆண்டின் இறுதிக்குள் டீலர் மற்றும் சர்வீஸ் பிரிவுகளில் மொத்தம் ஆயிரத்து இரு நூறு புதிய பணி இடங்களை நிரப்ப உள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மெட்ரோ பாலிடன் நகரங்களிலும் சர்வ தேசத் தரத்தில் புதிய டீலர்களை நியமிக்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தின் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது.


ஏற்கெனவே கடந்த ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 400 பேரைப் புதிதாகப் பணியில் அமர்த்திய பி.எம்.டபிள்யூ., நிறுவனம் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ஆயிரத்து இரு நூறு பேரைப் பணி நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்தது இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு இனிய தகவலாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us