தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் படிப்பதற்கான நுழைவுத்தேர்வுகள்

அமெரிக்காவில் படிப்பதற்கான நுழைவுத்தேர்வுகள்

அமெரிக்காவில் படிப்பதற்கான நுழைவுத்தேர்வுகள்


UPDATED : ஜன 11, 2011 12:00 AM

ADDED : ஜன 11, 2011 02:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2011 12:00 AM ADDED : ஜன 11, 2011 02:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு


நானோ டெக்னாலஜி துறையில் பொறியியல் படிக்க விரும்பினாலும் சரி, தத்துவம், பொறியியல் ஆகியவற்றின் கலவையோடு சேர்த்து பொருளாதாரத்தையும் படிக்க விரும்பினாலும் சரி, நீங்கள் முதலில் பரிசீலிக்க வேண்டிய நாடு அமெரிக்காதான். ஆனால் பொதுவாக அமெரிக்காவில் படிக்க விரும்பினால் நுழைவுத்தேர்வு அவசியம். அதுபோன்ற நுழைவுத்தேர்வுகளில் ஐந்தைப் பற்றி இங்கே விரிவாக காண்போம்


சாட் 1


அமெரிக்காவில் எந்தவித இளநிலை படிப்பில் சேர்வதற்கும் சாட் மதிப்பெண்கள் அவசியம். சமயத்தில் சாட் சப்ஜெக்ட் தேர்வு மதிப்பெண்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இந்த தேர்வு ஆரம்பத்தில் "ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட்&' என்று அழைக்கப்பட்டு, இளநிலை மாணவர்களுக்கான முக்கிய திறனாய்வு தேர்வாக ஆனது. இந்த தேர்வின்மூலம், இளநிலை படிப்பிற்கு தேவையான மாணவர்களின் பாட அறிவு சோதிக்கப்படுவதுடன், படித்தல்-எழுதுதல்-கணிதம் ஆகியவற்றிலுள்ள திறமைகளும் சோதிக்கப்படுகின்றன.


குறிப்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வானது வகுப்பறைக்குள்ளும், வெளியிலும் மாணவர்கள் பெற்றுள்ள திறனை சோதிக்கிறது. மேலும் ஒரு மாணவர் கல்லூரியில் எவ்விதம் சிறப்பாக செயல்படுவார் என்பதை சோதிக்கும்பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தாள்வழி தேர்வான இதில், மாணவர்கள் எழுதும் கட்டுரை, விருப்பத்தேர்வு கேள்விகள் மற்றும் மாணவர்கள் அளிக்கும் பதில்கள் போன்ற பலவித கேள்வி முறைகள் உள்ளன. சாட் தேர்வின் ஒவ்வொரு பிரிவும் 200-800 என்ற அளவீட்டு முறையில் மதிப்பிடப்படுகின்றன. அதிகப்பட்ச மதிப்பெண் 2400. சாட் தேர்வில் மொத்தம் 10 தேர்வு பகுதிகள் உள்ளன. இந்த தேர்வைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள www.collegeboard.com என்ற வலைதளத்தை அணுகவும்.


சாட் 1 தேர்வின் வடிவமைப்பு


இந்த பகுதியிலுள்ள எழுதுதல் தேர்வானது, விருப்பத்தேர்வு கேள்விகள் மற்றும் கட்டுரை வடிவில் நேரடியாக எழுதுதல் ஆகிய 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. மாணவரின் இலக்கணம், வார்த்தைத் தேர்வு மற்றும் பயன்பாடு ஆகிய திறன்களை சோதிப்பதாக இந்தத் தேர்வு அமைந்துள்ளது. இத்தேர்வுக்கான நேரம் 60 நிமிடங்கள். சுருக்க கட்டுரையானது, ஒரு மாணவர் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் மற்றும் வகைப்படுத்தும் திறமைகளை சோதிக்கிறது.


விருப்பத்தேர்வு கேள்விப் பகுதியானது, வார்த்தை மற்றும் பத்திகளை மேம்படுத்தி, அவற்றிலுள்ள அனைத்துவகை பிழைகளையும் திருத்தும் மாணவரின் திறனை சோதிப்பதாகும். கிரிடிகல் ரீடிங் பிரிவில் குறுகிய மற்றும் நீண்ட படித்தல் பத்திகள் உள்ளன. கேள்விகள் இந்தப் பத்திகளிலிருந்து கேட்கப்படும். இந்த பிரிவு இரண்டு 25 நிமிடங்கள், ஒரு 20 நிமிட பிரிவுகளைக் கொண்டது. கணிதப் பிரிவானது 4 பகுதிகளைக் கொண்டது. கணிதப்பிரிவு தேர்வின்போது, மாணவர்கள் கிராபிங் கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த முடியும்.


சாட் 1 தேர்வுக்கு தயாராகும் முறை


இது ஒரு திறனாய்வு தேர்வாக இருந்தாலும், திட்டமிட்டு தயாராவதன் மூலம் நல்ல மதிப்பெண் பெற முடியும். ஆனால் இந்திய மாணவர்கள் பலவித விருப்பத்தேர்வுகளைப் பற்றி அதிகம் அறியாமல் இருக்கிறார்கள். எனவே தேர்வுக்கு தயாராகும் முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல் அவசியம். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன், சாட் தேர்வுக்கு தயாராக தொடங்க வேண்டும்.


ஒவ்வொரு விண்ணப்ப காலத்திலும் கடைசி தேர்வு தேதியை பள்ளிகள் அமைப்பதால், முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தேர்வுக்கு தயாராவதற்காக குறைந்தது 3 மாதங்களாவது ஒதுக்க வேண்டும். தேர்வுக்கு தயாராகும் முறைகளை அறிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற முறைகளில் சாட் 1 தேர்வுக்கு தயாரானால், வெற்றிபெறுதல் எளிது.


ஆக்ட்


இந்த ஆக்ட் தேர்வானது, சாட் தேர்வுக்கு மாற்றான ஒன்றாகும். ஆக்ட் தேர்வில், 4 பலவித விருப்பத்தேர்வுகளும், ஒரு எழுதுதல் விருப்பத்தேர்வும் உள்ளன. இதிலுள்ள கணிதம், படித்தல் மற்றும் அறிவியல் பிரிவுகள் தேர்வெழுதுபவரின் பல்வேறு திறன்களை சோதிக்கின்றன. இதிலுள்ள விருப்ப எழுதுதல் தேர்வானது, சாட் தேர்வில் வரும் கட்டுரை கேள்வி பகுதிக்கு சமமானது. சுருக்க கட்டுரைத் தேர்வை மாணவர்கள் நிச்சயம் எழுத வேண்டும்.


பொதுவான தேர்வுநேரம் 2 மணி 55 நிமிடங்கள் என்றாலும், எழுதும் பகுதியானது கூடுதலாக 30 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இந்த தேர்வானது இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள நிலையங்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால் அனைத்து நிலையங்களும், ஒவ்வொரு தேர்வு தேதியிலும் தேர்வை நடத்துவதில்லை. ஒவ்வொரு தேசிய அல்லது சர்வதேச தேர்வு தேதிக்குப் பிறகும், 2.5 வாரங்களுக்குள் பெரும்பாலான மதிப்பெண்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.


(தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us