தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க பல்கலையுடன் மீன் வளக்கல்லூரி ஒப்பந்தம்

அமெரிக்க பல்கலையுடன் மீன் வளக்கல்லூரி ஒப்பந்தம்

அமெரிக்க பல்கலையுடன் மீன் வளக்கல்லூரி ஒப்பந்தம்


UPDATED : ஜன 12, 2011 12:00 AM

ADDED : ஜன 12, 2011 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2011 12:00 AM ADDED : ஜன 12, 2011 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தூத்துக்குடி: மீன் வளர்ப்பு தொடர்பாக, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் அமெரிக்க பல்கலையிடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


அமெரிக்காவின் அரிசோனா பல்கலையுடனான இந்த ஒப்பந்தப்படி, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மீன் வளர்ப்பு தொடர்பாக, அங்கு சென்று கற்பித்து, கற்று நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அது போல, அப்பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் இங்கு வரலாம். மீன் வளர்ப்பில் நவீன முறையை கையாளலாம்.


மொத்தம் ஐந்து ஆண்டு அமலில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்க பல்கலை தலைவர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளார். தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நேற்று நடந்த கருத்தரங்கில், அந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன் கையெழுத்திட்டார். நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. மீன் வளக்கல்லூரி முதல்வர் நந்திஷா, மீன் வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய இயக்குனர் வெங்கடரமணி, பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us