தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 2 தேர்வில் வென்ற மனிதநேய பயிற்சி மைய மாணவர்கள்

குரூப் 2 தேர்வில் வென்ற மனிதநேய பயிற்சி மைய மாணவர்கள்

குரூப் 2 தேர்வில் வென்ற மனிதநேய பயிற்சி மைய மாணவர்கள்


UPDATED : ஜன 13, 2011 12:00 AM

ADDED : ஜன 13, 2011 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2011 12:00 AM ADDED : ஜன 13, 2011 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த 315 மாணவர்கள், குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட மாநகராட்சி கமிஷனர், சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர் பதவிகள் அடங்கிய குரூப் 2 தேர்வுகளில் எழுத்துத் தேர்வு முடிவுகள், 11ம் தேதி வெளியிடப்பட்டது.


இதில் மனிதநேயம் மையத்தில் படித்த 315 மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 130 பேர் பெண்கள்; 185 பேர் ஆண்கள். மேலும் 10 பேர் மாற்றுத் திறனாளிகள். கடந்த 2007ம் ஆண்டிலிருந்து நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில், மனிதநேயம் மையத்தில் படித்த 595 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


தற்போது 22, 23ம் தேதி நடக்கவுள்ள குரூப் 1 மெயின் எழுத்துத் தேர்வுக்கு, 690 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு, புத்தகம், வகுப்புகள், மாதிரித் தேர்வுகள், வாகன வசதி, யோகா பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.


மேலும் மாணவர்களுக்கு மாதிரி நேர்முகத் தேர்வு, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது. இம்மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள், நாளை முதல் 91762 52070, 91762 54010, 044 24358373 ஆகிய தொலைபேசி எண்களில் பதிவு செய்துகொள்ளலாம் என, மையத்தின் மாநில தேர்வு ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் தெரிவித்தார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us