தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா: பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா: பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா: பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜன 13, 2011 12:00 AM

ADDED : ஜன 13, 2011 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2011 12:00 AM ADDED : ஜன 13, 2011 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்ட பல்கலைக்கழக ஆறாவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதி வாய்ந்த மாணவர்கள், பிப்ரவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின், ஆறாவது பட்டமளிப்பு விழா பிப்ரவரியில் நடக்கவுள்ளது. பட்டம் பெற தகுதி வாய்ந்த மாணவர்கள், உரிய விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட சட்ட கல்லூரிகளில் பெற்று, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பிப்ரவரி 10ம் தேதிக்கு முன் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலமாக பல்கலைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.


பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளில், தேர்ச்சி பெற்று பட்டம் பெற தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும், சம்பந்தப்பட்ட கல்வி நிலைய தலைவரை அணுகி, உரிய விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.


முந்தைய கல்வியாண்டுகளில் பட்டப்படிப்புகளை முடித்து பட்டம் பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள், தற்போது அவரவர் படித்த கல்லூரிகள் மூலம் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் மறுபடி விண்ணப்பிக்க தேவையில்லை. பட்டமளிப்பு விழா நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us