தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ. களில் செமஸ்டர் முறை அமல்?

ஐ.டி.ஐ. களில் செமஸ்டர் முறை அமல்?

ஐ.டி.ஐ. களில் செமஸ்டர் முறை அமல்?


UPDATED : ஜன 14, 2011 12:00 AM

ADDED : ஜன 14, 2011 01:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2011 12:00 AM ADDED : ஜன 14, 2011 01:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுவதிலுமுள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. -களில் செமஸ்டர் முறையை கொண்டுவருவதன் மூலம் மாணவர்கள், ஒவ்வொரு செமஸ்டருக்கு பிறகும் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்பதோடு, ஒவ்வொரு செமஸ்டரின் முடிவிலும் வெளியேறவும் வாய்ப்பு ஏற்படும். மேலும் மீண்டும் ஐ.டி.ஐ. -இல் சேர விரும்பினால், விட்ட இடத்திலிருந்தே தொடங்கலாம்.


டெல்லியில் நடந்த தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின்(என்.சி.வி.டி.) 39 வது கூட்டத்தில், இந்த முடிவிற்கு கொள்கையளவில் ஒப்புதல் தரப்பட்டது. இந்த செமஸ்டர் முறை மூலம் பலவித திறன் சம்பந்தமான பயிற்சிகளை ஐ.டி.ஐ. மாணவர்கள் பெற முடியும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான பணி வாய்ப்பு சமீபகாலத்தில் 35% -இலிருந்து 70% வரை அதிகரித்துள்ளது. அதேசமயம் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு 100% உள்ளது. இதைத்தவிர, நாட்டிலுள்ள ஐ.டி.ஐ. -கள் மற்றும் ஐ.டி.சி. -களை மதிப்பிட மற்றும் அங்கீகரிக்க, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிகளுக்கான டைரக்டர் ஜெனரல் மூலம் கியூ.சி.ஐ. அமைப்பை நியமிக்கும் திட்டமும் உள்ளது. இந்த மதிப்பிடுதல் பணியானது சுதந்திரமானதாக இருக்கும். கியூ.சி.ஐ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் என்.சி.வி.டி. -ஆல் இணைத்துக்கொள்ளப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


தற்போது நாட்டில் 2196 அரசு ஐ.டி.ஐ. -களும், 8734 தனியார் ஐ.டி.ஐ. -களும் உள்ளன. அவற்றிலுள்ள மொத்த இடங்கள் 12.18 லட்சம்.


மேலும் வடகிழக்கு மாநிலங்களிலுள்ள 20 ஐ.டி.ஐ. -களை தரம் உயர்த்துதல் மற்றும் அப்பகுதியிலுள்ள 28 ஐ.டி.ஐ. -களிலுள்ள குறைபாடுகளை சரிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us