தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உரிமை சட்டத்திற்கு திரிபுரா மறுப்பு

கல்வி உரிமை சட்டத்திற்கு திரிபுரா மறுப்பு

கல்வி உரிமை சட்டத்திற்கு திரிபுரா மறுப்பு


UPDATED : ஜன 18, 2011 12:00 AM

ADDED : ஜன 18, 2011 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2011 12:00 AM ADDED : ஜன 18, 2011 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தற்போதைக்கு பின்பற்ற முடியாது என்று திரிபுரா மாநில அரசு அறிவித்துள்ளது.


இது சம்பந்தமாக அவசியமான சட்டங்களை இயற்ற வேண்டியிருப்பதாக கூறும் அம்மாநில அதிகார வட்டாரங்கள், மாணவர்களை சேர்ப்பதில் தற்போது பின்பற்றப்படும் லாட்டரி அமைப்பு முறையையே தொடர முடிவு செய்திருப்பதாகவும் கூறின. 6 முதல் 14 வயது வரை, அதாவது 8 ம் வகுப்பு வரை கட்டாய கல்வி பெறுவதற்கான மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒரு குழந்தை தன் வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் பள்ளியில்தான் சேர முடியும். மற்றபடி அந்த குழந்தையோ, பெற்றோரோ விரும்பும் பள்ளியில் சேர முடியாது.


மத்திய அரசின் இந்த சட்டம், ஒரிசா, ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில அரசுகளால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


மாநில அரசு, மத்திய அரசின் புதிய சட்டத்திற்கேற்ப புதிய விதிமுறையை முடிவுசெய்த பின்னர்தான் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று திரிபுரா மாநில பள்ளி கல்வி துறைக்கான முதன்மை செயலர் பனமலி சின்ஹா கூறியுள்ளார்.


அதேசமயம் மத்திய அரசின் விதிமுறையின் கீழ், சர்வ சிக்ஷா அபியான்(எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின்படி, 8 ம் வகுப்பு வரையான மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என்று திரிபுரா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்கீழ், மத்திய அரசு, மாநில அரசிற்கு ரூ.23 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us