தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் புதிய சமையல் கலை படிப்புகள்

இக்னோவில் புதிய சமையல் கலை படிப்புகள்

இக்னோவில் புதிய சமையல் கலை படிப்புகள்


UPDATED : ஜன 18, 2011 12:00 AM

ADDED : ஜன 18, 2011 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2011 12:00 AM ADDED : ஜன 18, 2011 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமையல் கலை சம்பந்தமாக பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்(இக்னோ) அறிமுகப்படுத்த உள்ளது.


இக்னோ பல்கலைக்கழகத்தில் புதிதாக அமையவிருக்கும் சமையல் கலைகளுக்கான கல்வி நிறுவனத்தின் மூலம் இந்த படிப்புகள் நடத்தப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் சமையல் கலைகள், சமையல் மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பம் போன்ற 3 வருட பட்ட படிப்புகளிலும், உணவு தயாரிப்பு, உணவு பதப்படுத்தல் மற்றும் பேக்கரி தொழில்நுட்பம் போன்ற ஒரு வருட டிப்ளமோ படிப்புகளிலும் சேரலாம். இவைத்தவிர, இத்துறையில் பல பரந்த அளவிலான படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேற்குறிப்பிட்ட புதிய துறை தொடங்கப்பட்டதும், ஒவ்வொரு வருடமும் புதிய படிப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறின.


மேலும் குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வண்ணம், ஒரு வாரம் மட்டுமே நீடிக்கக்கூடிய மொத்தம் 8 சான்றிதழ் பயிற்சிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தவிர எம்.பி.ஏ. படிப்பை போன்று, சமையல் கலை துறையில், முதுநிலை சமையல் கலை நிர்வாகப் படிப்பும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள மாணவர்களுக்கு முனைவர் பட்ட படிப்புகளும் உண்டு. இந்திய சமையலை, பெரிய அளவில் சந்தைப்படுத்தும் வகையிலான வியூக படிப்புகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us