தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்ல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள்

செய்ல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள்

செய்ல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள்


UPDATED : ஜன 18, 2011 12:00 AM

ADDED : ஜன 18, 2011 03:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2011 12:00 AM ADDED : ஜன 18, 2011 03:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா என்ற செயில் நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று என்பதை அறிவோம். இந்த நிறுவனத்தில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ்  இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிகல், மெட்டலர்ஜிகல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் மொத்தம் 96 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


என்னென்ன பிரிவுகள்?
செயில் நிறுவனத்தின் டெக்னீசியன் பதவிக்கு ஆப்ரேட்டர்கம் டெக்னீசியன் டிரெய்னி, அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி என்ற இரு பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


வயது வரம்பு
செய்ல் நிறுவன டெக்னீசியன் டிரெய்னி பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 01.10.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
செயில் நிறுவனத்தின்ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க மெக்கானிகல், எலக்ட்ரிகல், மெட்டலர்ஜி, எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது.


அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிப்புடன் பிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் டிரேடில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது.


இதர தகவல்கள் செயில் நிறுவனத்தின் டெக்னீசியன் டிரெய்னி பதவி குறைந்த பட்சம் 2 ஆண்டு காலத்திற்கு பயிற்சி அடிப்படையில் இருக்கும். தேவைப்பட்டால் இந்த கால அவகாசம் அதிகரிக்கவும் படலாம். இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின் டெக்னீசியன் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.250/க்கான ஸ்டேட் வங்கி டி.டி.,யை "SAIL  A/C Salem Steel Plant" என்ற பெயரில் சேலம் ஸ்டீல் பிளான்ட் கேம்பஸ் கிளையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் பரிந்துரை செய்த படிவ மாதிரியிலேயே அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் டி.டி.,யைப் பின்வரும் முகவரிக்கு 19.01.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி
The Advertiser,
POST BAG NO.781,
Circus Avenue Post Office,
Kolkatta 700017.


விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 19.01.2011


இணைய தள முகவரி: www.sail.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us