தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் காலியிடங்கள்

எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் காலியிடங்கள்

எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் காலியிடங்கள்


UPDATED : ஜன 19, 2011 12:00 AM

ADDED : ஜன 19, 2011 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2011 12:00 AM ADDED : ஜன 19, 2011 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் என்ற அரசுத் துறை நிறுவனம் பொதுத் துறையில் இயங்கும் முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் பல்வேறு பொருட்களையும் தயாரிப்பதோடு பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மினி ரத்னா நிறுவனமாக எச்.எல்.எல்., லைப் கேர் லிமிடெட் திகழ்கிறது.


இந்த நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர், அக்கவுன்ட்ஸ், கிராஜூவேட் மற்றும் புரொகிராமர் டிரெய்னி பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு
எச்.எல்.எல்., லைப் கேர் லிமிடெட் நிறுவனத்தின் ஸ்டெனோகிராபர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க உச்ச பட்ச வயது 35 ஆகவும், இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி
ஸ்டெனோகிராபர் டிரெய்னி பதவிக்கு குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சியும், ஆங்கில டைப்ரைட்டிங் ஹையர் மற்றும் ஷார்ட் ஹேண்ட் லோயர் தேர்ச்சியும், கம்ப்யூட்டர் திறனும் தேவைப்படும். அக்கவுன்ட் டிரெய்னி பதவிக்கு குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், கிராஜூவேட் டிரெய்னி பதவிக்கு பி.எஸ்சி.,
இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது கணிதத்தில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் தேவைப்படும்.


புரொகிராமர் டிரெய்னி பதவிக்கு எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ.,வில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவைப்படும். இதர தேவைகள், தகுதிகள் போன்ற விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை
எச்.எல்.எல்.,லைப் கேர் லிமிடெட்டின் காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் 19.01.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இணைய தள முகவரி: www.lifecarehll.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us