தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணினி பயன்பாட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு குழு அமைப்பு

கணினி பயன்பாட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு குழு அமைப்பு

கணினி பயன்பாட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு குழு அமைப்பு


UPDATED : ஜன 20, 2011 12:00 AM

ADDED : ஜன 20, 2011 02:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2011 12:00 AM ADDED : ஜன 20, 2011 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றை கணினி பயன்பாட்டுக்கு, ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில், 14 உறுப்பினர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன், பொன்.கோதண்டராமன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐராவதம் மகாதேவன், செம்மொழி தமிழாய்வு நிறுவன பேராசிரியர்கள் கந்தசாமி, மணவாளன் ஆகிய உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.


உலகத்தமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை பேராசிரியர் நாச்சிமுத்து, தமிழ் இணைய கல்விக்கழக இயக்குனர் நக்கீரன், எஸ்.ஆர்.எம்., பல்கலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னவைக்கோ, கவிஞர் வைரமுத்து, சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப வல்லுனர் அரவிந்தன், சீமென்டெக் கார்ப்பரேஷன் மணிவண்ணன் மற்றும் முனைவர் தெய்வசுந்தரம் ஆகியோரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இக்குழுவினர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக விரைவில் அறிக்கையை வழங்கும். இவ்வாறு தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us