தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்-கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்!

ஐ.ஐ.எம்-கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்!

ஐ.ஐ.எம்-கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்!


UPDATED : ஜன 20, 2011 12:00 AM

ADDED : ஜன 20, 2011 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2011 12:00 AM ADDED : ஜன 20, 2011 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பெரிய மதிப்பை பெற்றிருக்கும் இந்த கல்வி நிறுவனமும் சில விஷயங்களில் முன்னேற வேண்டியுள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இப்படி கூறுவது நாம் அல்ல. ஐ.ஐ.எம்-கல்கத்தா பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய டெல்லி பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், ஜவஹர்லால் நேரு பல்கலையின் பொருளாதார பேராசிரியருமான தீபக் நய்யார், தனது பேச்சில் ஐ.ஐ.எம். ஆராய்ச்சிகள் குறித்து பல ஆலோசனைகளை கூறியுள்ளார். அவரின் கருத்தை இங்கே நாம் தருகிறோம்.


 


* நான் உலகின் பலநாட்டு மாணவர்களுக்கும் கற்பித்துள்ளேன். ஒவ்வொரு பகுதி மாணவர்களிடையேயும் பல நிலைகளில் வேறுபாடுகளையும், முதிர்ச்சிகளையும் கண்டதுண்டு. அதேசமயம் ஐ.ஐ.எம். கல்வி சாலையில் நான் மாணவர்களுக்கு பாடம் எடுத்தபோது, அவர்களின் முதிர்ச்சியும், திறனும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் இருந்ததைக் கண்டேன். நாட்டின் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், ஒவ்வொரு கல்வி அம்சத்திலும் சராசரி தரநிலையை உயர்த்துவது முக்கியமானதாக உள்ளது. அதேநேரத்தில் வெளியே இருப்பவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். விரிவாக்கம், மதிநுட்பம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய 3 தூண்கள்தான், பொருளாதார மற்றும் சமூக மாறுதல்களுக்கு அடிப்படைகளை அளிக்கும்.


நான் சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்காக என்னை மன்னிக்கவும். தற்போது ஐ.ஐ.எம் -களில் தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் பெரும்பாலானவை பாடங்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. ஆனால் ஐ.ஐ.எம். ஆராய்ச்சிகள், பல துறைகளை இணைத்து செய்யப்படுவதாக இருக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்கள், சேவை மையங்கள், நிதி நிறுவனங்கள், உள்ளாட்சி அரசாங்கம், பொது பயன்பாடுகள், தொழில்நுட்ப திறன்கள், புதுவித தயாரிப்பு, சந்தை மேம்பாடு போன்ற பலவித துறைகளில் ஐ.ஐ.எம் -கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.


தனி மாணவரின் விருப்பங்கள் ஒரு பகுதி சமூக சூழல்களாலும், ஒரு பகுதி கல்வி நிறுவன சூழல்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது எனக்குத் தெரியும். சர்வதேச அளவிலான நிறுவனங்களுக்கு தேவையான மேலாளர்களை உருவாக்குவது போன்ற செயல்பாடுகளுக்கே ஐ.ஐ.எம் -களில் முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூகம் மற்றும் குடும்ப சூழல்களால் சம அளவில் செல்வாக்கு செலுத்தப்படுவதையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆர்வத்தின் அடிப்படையில் மாணவர்கள் சிந்திப்பதானது, மேற்கூறிய அனைத்தின் தாக்கத்தையும் கொண்டுள்ளது. ஆனால் அதேசமயத்தில் கல்வி நிறுவன சூழல்களில் ஆழமாக பதிந்துள்ளது.


நாம் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்யும்பட்சத்தில், அதை விரும்பும் வகையில் உருவாக்கும் வாய்ப்பு குறைந்தபட்சம் ஐ.ஐ.எம். மாணவர்களாகிய உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் மிக சிறப்பாகவும், மிகப் பெரிதாகவும் சிந்திப்பதற்கு வசதியுள்ள கல்வி நிறுவனத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். சுதந்திர இந்தியாவை உருவாக்கிய தலைவர்கள், தரமான உயர்கல்வி நிறுவனங்கள் என்ற நிலையில் ஐ.ஐ.எம். மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களை 1950 ம் ஆண்டுகளின் இறுதியில் சிந்தித்து, திட்டமிட்டு, 1960 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவைகளை உருவாக்கினார்கள். அந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு 50 வருடங்கள் கழித்து பார்க்கையில், அவற்றால் விளைந்த நன்மைகள் தெளிவாக தெரிகின்றன.


வணிக நோக்கிலான செயல்திட்டங்கள் மற்றும் செய்ததையே திரும்ப திரும்ப செய்தல் போன்றவற்றால், ஐ.ஐ.எம் -களுக்கு வெற்றி கிடைக்காது. இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கல்வி நிறுவனங்களை இடம்விட்டு இடம் மாற்றி வைக்க முடியாது. ஒரு கல்வி நிறுவனத்தை போலவே இன்னொன்றை உருவாக்க முடியாது. மாறாக கல்வி நிறுவனங்கள், பல அம்சங்களை உள்வாங்கி வளர்கின்றன. வரும் 2025 ம் ஆண்டில் இந்தியாவிற்கு என்ன தேவை என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமெனில், செய்ததையே திரும்ப செய்யக்கூடாது. அன்று 1950 -களில் இருந்த இந்தியாவைவிட, இன்று 2010 -இல் இருக்கும் இந்தியா மிகவும் வித்தியாசமானது. உலகின் அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளின் சமநிலையில், மாற்றத்தின் ஆரம்பங்களை சிந்தித்து பார்ப்பது சாத்தியமே. மாறிப்போன தேசிய மற்றும் சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டும். அவற்றின் எதிர்காலம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.


அமெரிக்காவின் ஹாவர்ட் போன்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களை நாம் பின்பற்றும் நிலைமாறி, நம்மை அவர்கள் பின்பற்றும் நிலை வர வேண்டும். தங்களின் கற்பித்தல், ஆராய்ச்சிகள் மற்றும் கற்றல் திட்டங்களில் மாற்றங்கள் செய்வதைப் பற்றி ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் சிந்திக்கும் என்று நான் நம்புகிறேன். மாணவர்கள் வித்தியாசமான துறைகளில் தங்களது தொழிலை தேர்ந்தெடுக்கும் வகையில் ஐ.ஐ.எம் -களில் சிறப்பு கல்வி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கல்விக்கும், செல்வத்திற்கும் இடையேயான ஒரு சமநிலையை ஐ.ஐ.எம். சமூகங்கள் கண்டறியும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் உண்டு.


 


நன்றி: கேரியர்360


 



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us