தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு சீன தூதர் வருகை

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு சீன தூதர் வருகை

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு சீன தூதர் வருகை


UPDATED : ஜன 21, 2011 12:00 AM

ADDED : ஜன 21, 2011 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2011 12:00 AM ADDED : ஜன 21, 2011 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் அமைப்பதற்கு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று சீனா கூறியுள்ளது.


பீகாரின் நாளந்தா மாவட்டத்திலுள்ள பல்கலை வளாகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த சீன தூதர் சாங் யான், பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணை வேந்தருடன் கலந்துரையாடினார். மேலும் அவர் புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டார். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12 ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது.


அந்த பல்கலையை பழைய வரலாற்று புகழுடன் மறுநிர்மாணம் செய்ய சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், கொரியா ஆகிய நாடுகள் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவது நமக்கு நினைவிருக்கலாம். இந்த நிலையில், சீன தூதுவரின் நாளந்தா பயணமும், அவரின் அறிவிப்பும் அந்த பணிக்கு புது உற்சாகம் ஊட்டுவதாய் உள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us