UPDATED : ஜன 24, 2011 12:00 AM
ADDED : ஜன 24, 2011 12:20 PM
ஐ.சி.ஏ.ஆர்., (Indian Council of Agricultural Research) கல்வி நிறுவனம், இக்கல்வியாண்டில் வேளாண்மை தொடர்பான இள நிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்காக ஏ.ஐ.இ.இ.ஏ.,2011 என்ற நுழைவுத்தேர்வை நடத்துகிறது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, மீன்வள அறிவியல், உணவு அறிவியல், பட்டுப்புழு வளர்த்தல், ஹோம்சயின்ஸ், அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் மற்றும் பேங்க்கிங் உள்ளிட்ட இளநிலை (பி.எஸ்சி.,/ பி.டெக்.,/ பி.எப்.எஸ்சி.,) மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. www.icar.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களையும், கையேடுகளையும் பெறலாம்.
இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ்2 வில் 50 சதவீத மதிப்பெண்ணுக்கு அதிகமான பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பிரிவில் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வள அறிவியல், பயிர்வளர்ப்பு, டெய்ரி டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 15, 2011. இளநிலை பிரிவிற்கு தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 16, 2011. முதுநிலை பிரிவிற்கு தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 17, 2011.
