தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண்களுக்கு சம உரிமை

பெண்களுக்கு சம உரிமை

பெண்களுக்கு சம உரிமை


UPDATED : ஜன 24, 2011 12:00 AM

ADDED : ஜன 24, 2011 02:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2011 12:00 AM ADDED : ஜன 24, 2011 02:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம்., கோழிக்கோடு கல்வி நிறுவனம் கடந்த ஆண்டு மாணவர்களை தேர்வு செய்தபோது 30 சதவீத பெண்களை தேர்வு செய்துள்ளது. இதுபோன்ற வழக்கத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை கோழிக்கோடு ஐ.ஐ.எம்., கல்வி மையத்தையே சேரும். நாட்டில் உள்ள மற்ற ஐ.ஐ.எம்., களில் இதுபோன்ற வழக்கம் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.ஐ.எம்., கோழிக்கோடு இயக்குனர் தெபாசிஸ் சாட்டர்ஜி, "கேட்&' தேர்வை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள். ஆனால் வெறும் 10 சதவீத பெண்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.எம்., கல்வி மையத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றனர். இதனை சரிசெய்ய ஒவ்வொரு வகுப்பிலும் ஆண், பெண் விகிதாச்சாரம் சம அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


வரும் ஆண்டுகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த திட்டம் தொடரும் என சாட்டர்ஜி உறுதிபடக் கூறியுள்ளார். ஐ.ஐ.எம்., கோழிக்கோடு கல்வி நிறுவனத்தை 20 கோடி ரூபாயில் போதுமான உள்கட்டமைப்புகளுடன் விரிவுப்படுத்தப்படும். அதன் பின்னர் மேலும் பல புதிய படிப்புகள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us