இந்திய ராணுவத்தில் குறுகிய காலப் பணி நிலை அறிவிப்பு
இந்திய ராணுவத்தில் குறுகிய காலப் பணி நிலை அறிவிப்பு
UPDATED : ஜன 24, 2011 12:00 AM
ADDED : ஜன 24, 2011 04:15 PM
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் தேசிய மாணவர் படை தகுதி உடையவர்களுக்கான குறுகிய காலப் பணி நிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான பயிற்சி வரும் அக்டோபர் முதல் துவங்கும் என்று தெரிகிறது. இந்தப் பணி இடங்களுக்கு தகுதியுடைய ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளில் ஆண்களுக்கு 50 காலியிடங்களும், பெண்களுக்கு 8 காலியிடங்களும் உள்ளன.
தகுதி
என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் 'சி' சான்றிதழைப் பெற்றவர்களே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள். இவர்கள் இந்தத் தகுதியுடன் பின்வரும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
அ. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்;
ஆ. குறைந்த பட்சம் இரண்டு கல்வி ஆண்டுகளாவது சீனியர் டிவிஷன் என்.சி.சி.,யில் பங்கு பெற்றிருக்க வேண்டும்;
இ. என்.சி.சி., 'சி' சான்றிதழைக் குறைந்த பட்சம் 'பி' கிரேடுடன் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்திய ராணுவத்தின் என்.சி.சி., அடிப்படையிலான தேர்ச்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.07.1986 முதல் 01.07.1992க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
உடல் தகுதிகள்
உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மி., யும் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண் குறைபாடு உள்ளவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
பயிற்சி
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் 11 மாத கால பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வெற்றிகரமாகப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு லெப்டினன்ட் அளவிலான ரேங்க் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி
என்.சி.சி., அனுபவம் பெற்றவர்களுக்கான இந்திய ராணுவத்தின் சிறப்பு சேர்க்கைக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கையொப்பமிட்ட சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை என்.சி.சி., 'சி' சான்றிதழ் வழங்கப்பட்ட ஓ.சி., என்.சி.சி., மையத்திற்கே அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களில் கமாண்டிங் அதிகாரி கையொப்பமிட்டு பின்வரும் முகவரிக்கு 01.02.2011க்குள் அனுப்புவார்.
தாமதத்தைத் தவிர்க்க உங்கள் விண்ணப்பத்தின் அட்வான்ஸ்டு காபியை நீங்களே நேரடியாக இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கெனவே ராணுவப் பணியில் ஈடுபட்ட போது பாதிக்கப்பட்ட பணியாளர்களின் குழந்தையாயிருந்து என்.சி.சி.,யில் 'சி' சான்றிதழ் பெற்றவர்கள் பிப்ரவரி 15க்குள் வேறொரு முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவர்களுக்கு நிபந்தனைகளில் தளர்ச்சி உள்ளது. விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
DG, NCC West Block & IV,
RK Puram, New Delhi - 110066.
