தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையில் பெல்லோஷிப் வாய்ப்பு

சென்னை பல்கலையில் பெல்லோஷிப் வாய்ப்பு

சென்னை பல்கலையில் பெல்லோஷிப் வாய்ப்பு


UPDATED : ஜன 24, 2011 12:00 AM

ADDED : ஜன 24, 2011 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2011 12:00 AM ADDED : ஜன 24, 2011 05:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தென் இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மூத்த பல்கலைக் கழகம் என்று சென்னைப்பல்கலைக் கழகத்தைக் கூறுவார்கள். ஆனால் தற்போது இந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழகத்தின் 3 மாவட்டங்கள் மட்டுமே தற்போது உள்ளன. இந்தப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை மேலும் மேலும் உயர்திறன் பெற்று வருவது தனிச்சிறப்பாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


என்னென்ன பிரிவுகள்
சென்னைப் பல்கலைக் கழகத்தின் புள்ளியியல் துறையின் கீழ் 3 விதமான பெல்லோஷிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது நடப்பில் உள்ள எஸ்.இ.ஆர்.சி., டி.எஸ்.டி.,திட்டத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், பி.யூ.ஆர்.எஸ்.இ., திட்டத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், யுனிவர்சிடி ரிசர்ச் பெல்லோஷிப் என்ற பிரிவுகள் தான் இவை.


கல்வித் தகுதி
புள்ளியியலில் எம்.எஸ்சி., அல்லது எம்.பில்., முடித்தவர்கள் இந்த பெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதும் கம்ப்யூட்டரில் புரோகிராமிங் திறன் படைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பெல்லோஷிப் தொகை எவ்வளவு
சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெல்லோஷிப்பிற்கு மாதம் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தொகையாக ரூ.12 ஆயிரமும் இதனுடன் நகர ஈட்டுப் படியும் வழங்கப்படும். யுனிவர்சிடி ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி
மேற்குறிப்பிட்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எதிர் வரும் பிப்ரவரி மாதம் ஒன்று மட்டும் இரண்டாம் தேதி தங்களுடைய ஆவணங்களுடன் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். முழு விபரங்களறிய இக்கல்வி நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


நேர்காணல் நடைபெறும் நாள் 01-02-2011 மற்றும் 02-02-2011 காலை 10.00 முதல் மதியம் 01.00 வரை மட்டுமே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us