UPDATED : ஜன 25, 2011 12:00 AM
ADDED : ஜன 25, 2011 02:57 PM
அ நிறம் | அளவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், 31 சதவீத பள்ளிகளுக்கு குடிநீர் வசதி இல்லை என்று தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் வசதியே மாணவர்களுக்கு இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மேலும் 45 சதவீத பள்ளிகளில் "டாய்லெட்' வசதி இல்லை என்றும், 56 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கென தனி "டாய்லெட்' வசதிகள் இல்லை எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் "அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்' அமல்படுத்தப்படும் வேளையில், கல்விக்கும் மட்டுமல்லாமால் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
