தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியலை பரப்புவது அரசின் புதிய இலக்கு

அறிவியலை பரப்புவது அரசின் புதிய இலக்கு

அறிவியலை பரப்புவது அரசின் புதிய இலக்கு


UPDATED : ஜன 31, 2011 12:00 AM

ADDED : ஜன 31, 2011 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2011 12:00 AM ADDED : ஜன 31, 2011 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் அமைச்சராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டுள்ள பவன் குமார்
பன்சல் தனது உடனடி இலக்கு அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் அதிகரிக்கச் செய்வது தான் என்று கூறியுள்ளார்.



அதற்கேற்ற சூழலை உருவாக்குவதும் ஆய்வுக் கூடங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டியதும் தான் தனது அமைச்சகத்தின் முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சி.எஸ்.ஐ.ஆர்., போன்ற மத்திய ஆய்வுக் கூடங்களின் அரும் பணியின் பலன்கள் தொடர்ந்து மக்களைச் சென்றடைய வேண்டியதை தான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.



மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொடர்பான புதிய சிந்தனைய உருவாக்கவும் அதற்கேற்ற விருதுகளை தொடர்ந்து அவர்களுக்குத் தந்து ஊக்குவிப்பதும் தனது அமைச்சகத்தின் முக்கியப் பணிகளாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கண்காணிப்பு பணியில் 'நேத்ரா'  ஜ.ஐ.டி., மும்பை கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் சிறிய ரக விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஆளில்லா விமானத்திற்கு "நேத்ரா' என்று அவர்கள் பெயர் சூட்டி உள்ளனர். இதன் மூலம் மாவோயிஸ்டுகளை கண்காணிக்க ஜார்க்கண்ட் மாநில காவல்துறை திட்டமிட்டுள்ளது.



ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட அடர்ந்த வனபகுதிகளில் "நேத்ரா' உதவியுடன் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக ஜார்க்கண்ட் மாநில காவல்துறை டி.ஜி.பி., நேயாஸ் அகமது தெரிவித்துள்ளார். இதனை வடிவமைத்த ஐ.ஐ.டி., மும்பை மாணவர்களை அகமது வெகுவாக பாராட்டினார். தரை மட்டத்திலிருந்து வானம் வரை பறந்து கண்காணிக்கும் வகையில் "நேத்ரா' வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us