UPDATED : பிப் 01, 2011 12:00 AM
ADDED : பிப் 01, 2011 10:25 AM
வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டு பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் நவீன சாதனங்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள கல்வி மையங்களின் நிலைமை இன்னும் கவலை அளிப்பதாக உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே போதுமான அளவில் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு நமது நாட்டு கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமெனில், அனைத்து கல்வி மையங்களையும் நவீனமயமாக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் செய்யப்பட வேண்டிய நவீன வசதிகள்:
* "புரொஜக்டர்&' மூலமாக திரையில் பாடங்களை நடத்தும் வசதி
* இமெயில், எஸ்.எம்.எஸ்., மூலம் பாடத்திட்டங்கள், தேர்வுதேதி, தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் வசதி. ஆசிரியர்களிடம் மாணவர்கள் இமெயில் வழியாக சந்தேகங்களை கேட்கும் வகையில் இருவருக்கும் பிரத்யேகமாக இமெயில் முகவரி வழங்க வேண்டும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக கணினி வசதி செய்து தரப்பட வேண்டும்.
* உள்நாடு மட்டுமல்லாது சர்வதேச அளவிலான இபுத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களை மாணவர்கள் படிக்கும் வசதிகளை செய்து தர வேண்டும்.
* வகுப்பறைகளில் கம்பியில்லா இணையதள வசதி
* கணினி பாடத்திற்கு மட்டுமல்லாது அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நவீன ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
* "வீடியோ கான்பரன்சிங்&' முறையில் நிபுணர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் வகையிலான சாதனங்கள் இதுபோன்ற மேலும் பல நவீன
வசதிகளை கல்வியாளர்களின் ஆலோசனைகளை பெற்று நமது மாணவர்கள் பயன்பெறும் வகையில் செய்துதரப்பட வேண்டும். பசுமை புரட்சி போல கல்வி நிலையங்களை நவீனப்படுத்தும் "தொழில்நுட்ப புரட்சி&' நமது நாட்டில் ஏற்பட வேண்டும். நகர்புறம், கிராமப்புறம் என்ற பாரபட்சமில்லாமல் நமது கல்வி நிலையங்கள் அனைத்திலும் நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
