தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.சி.சி.,யில் மனிதநேய பெருவிழா

எம்.சி.சி.,யில் மனிதநேய பெருவிழா

எம்.சி.சி.,யில் மனிதநேய பெருவிழா


UPDATED : பிப் 02, 2011 12:00 AM

ADDED : பிப் 02, 2011 02:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2011 12:00 AM ADDED : பிப் 02, 2011 02:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை கிறிஸ்தவ கல்லூரி, தமிழ்பேரவை சார்பில், மனிதநேயப் பெருவிழா நேற்று நடந்தது.


சென்னை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மோசசு மைக்கேல் பாரடே வரவேற்றார். முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் முன்னிலை வகித்தார். தத்துவத்துறை பேராசிரியர் மதிவாணனுக்கு, ‘மனித நேயச் செல்வர்’ விருதும், மேயர் சுப்ரமணியனுக்கு, ‘அன்னை தெரசா’ விருதும் வழங்கப்பட்டது.


விழாவில், ஹாங்காங் தமிழ் பண்பாட்டு பேரவை துணைத் தலைவர் ஜமால் பேசுகையில்,‘இங்கு படித்தவர்கள் நம் நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உயர் பதவியில் பணியாற்றி வருகின்றனர். சென்னை மேயர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஹாங்காங்கில், கடந்த 1967ம் ஆண்டு தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. தற்போது, இச்சங்கத்தில் உள்ளவர்கள் சகோதரர்களாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். மனித நேயம், வீட்டில் இருந்து உருவாக வேண்டும். ஒவ்வொருவரும் மனிதத்தன்மை, மனித நேயத்தோடு நடக்க வேண்டும். தமிழ் உணர்வை விட்டுவிடக்கூடாது. மாணவர்கள் நாட்டின் ‘டார்ச் லைட்டாக’ இருக்க வேண்டும்’ என்றார்.


மேயர் சுப்ரமணியன் பேசுகையில்,‘சென்னை மேயராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மாநகராட்சி ஆறு விருதுகளை பெற்றுள்ளது. இந்திய, உலக அளவிலான விருதுகள் கிடைத்தாலும், அவற்றை விட இந்த விருது சிறந்தது. கடந்த ஓராண்டில் சென்னை மாநகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சாலைகளில் பிச்சை எடுத்தவர்கள், பிச்சை எடுத்த முதியவர்கள், சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்தவர்கள் என 1,310 பேரை கண்டறிந்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.


நடைபாதையில் தங்குபவர்கள் 21 ஆயிரத்து 432 பேரை கண்டறிந்து, அவர்களுக்கு வசதியாக 10 இடங்களில் இரவு காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன’ என்றார். சென்னை மயிலை - மறைமாவட்ட பேராயர் சின்னப்பா, குமரி அனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர். 


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us