தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் துவங்க துணைவேந்தர் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் துவங்க துணைவேந்தர் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் துவங்க துணைவேந்தர் வலியுறுத்தல்


UPDATED : பிப் 07, 2011 12:00 AM

ADDED : பிப் 07, 2011 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2011 12:00 AM ADDED : பிப் 07, 2011 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு பள்ளிகளில், நர்சரி வகுப்புகள் துவங்க வேண்டும், என, புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் தரீன் பேசினார். தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஓமியட்) சார்பில், கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற, இக்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, ராயப்பேட்டை, புதுக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது.மொத்தம் 54 பள்ளிகளிலிருந்து 579 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


அவற்றில், பிளஸ் 2 பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. முக்கிய பாட வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 27 பேரும் கவுரவிக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பில், ஸ்டேட் போர்டு, மெட்ரிக் மற்றும் ஓரியண்டல் பாடப் பிரிவுகளில், தலா முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாணவர்கள் மற்றும் பாட வாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்ற 15 பேரும் கவுரவிக்கப்பட்டனர்.


சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.விருதுகளை வழங்கி, புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் தரீன் பேசியதாவது:நாம் சுதந்திரம் அடைந்த போது, 65 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவோராக இருந்தனர். தற்போது, அது 55 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த விகிதாசாரம் முழுமையாக குறைய வேண்டும். மூன்று முதல் ஆறு வயது வரை, குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபாரமாக உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


இந்த வயதில் அவர்களின் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். எனவே, ஆறு வயதில் குழந்தைகளை நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு மாறாக, அவர்களை முன் கூட்டியே சேர்க்கும் வகையில், அரசு பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் துவக்கப்பட வேண்டும்.இவ்வாறு தரீன் பேசினார்."ஓமியட்' அமைப்பின் தலைவர் கலிபுல்லா, பொதுச் செயலர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us