UPDATED : பிப் 07, 2011 12:00 AM
ADDED : பிப் 07, 2011 12:28 PM
விருதுநகர்: தமிழகத்தில் என்.எஸ்.எஸ்., (நாட்டு நலப் பணித் திட்டம்)திட்டத்தில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு, விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்லூரி படிப்பை முடித்து சென்று விட்டதால், விருதுகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மாணவர்களிடையே சேவை செய்யும் மனப்பான்மை வளர்க்கவும், ஆளுமை திறமைகளை மேம்படுத்தவும், என்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்பட்டு வருகிறது.
தேசிய பேரிடர் காலங்கள், திருவிழாக்கள், போலியோ சொட்டு மருந்து, இலவச மருத்துவ முகாம்கள், போக்குவரத்து நெருக்கடி போன்ற காலங்களில் என்.எஸ்.எஸ்., அமைப்பினர் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகின்றனர். இந்த அமைப்பில் சிறப்பாக பணியாற்றும் மாணவர்கள், திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப் பாளர்களுக்கு ஆண்டு தோறும் மாநில அளவில் விருது வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பித்தவர்களை, குழு தேர்வு செய்து அதிகாரிகள் ஒப்புதலுக்கு அனுப்பும். கடந்த இரு ஆண்டுகளாக இந்த விருது தாமதமாக வழங்கப்படுவதால், தேர்வு பெறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2008 முதல் 2010 வரை தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு, சென்னையில் உலக பல்கலை சேவை மையத்தில் அமைச்சர் மைதீன்கான் பிப்., 8ல் விருது வழங்குவார், என அறிவிக்கப்பட்டுள்ளது.
2008-09 கல்வி ஆண்டில் படித்த பல மாணவர்கள், படிப்பை முடித்து பள்ளி, கல்லூரிகளை விட்டு சென்று விட்டனர். அவர்கள் படித்த காலத்திலேயே விருது பெற் றால் தான் மாணவருக்கும், கல்லூரிகளுக்கும் பெருமை. எனவே, இனி வரும் காலங்களில் ஆண்டின் துவக் கத்தி லேயே விண்ணப்பங்களை பெற்று, ஆண்டு இறுதிக்குள் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
மாநில அலுவலர் செல்லத்துரை கூறுகையில், இளைஞர் நலத்துறைக்கு செயலர் இல்லாததால், விருதுக்கு குழு தேர்வு செய்தும் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் தாமதம் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் தாமதமின்றி விருது வழங்கப்படும்,&'&' என்றார்.
