தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய விமானப் படையில் ஆண்களுக்கான பணி அறிவிப்பு

இந்திய விமானப் படையில் ஆண்களுக்கான பணி அறிவிப்பு

இந்திய விமானப் படையில் ஆண்களுக்கான பணி அறிவிப்பு


UPDATED : பிப் 09, 2011 12:00 AM

ADDED : பிப் 09, 2011 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2011 12:00 AM ADDED : பிப் 09, 2011 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் பிளையிங், டெக்னிகல் மற்றும் கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் குறுகிய கால நிலை அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு
இந்திய விமானப் படையின் பிளையிங் பிரிவு குறுகிய கால நிலை அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2012 அன்று 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1989 முதல் 01.01.1993 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். டெக்னிகல் பிரிவு குறுகிய கால நிலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2012 அன்று 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



அதாவது 02.07.1984 முதல் 01.07.1994க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கிரவுண்ட் ட்யூடி பிரிவு குறுகிய கால நிலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2012 அன்று 20 வயது முதல் பிரிவைப் பொறுத்து அதிக பட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.



கல்வித் தகுதி
இந்திய விமானப் படையின் பிளையிங் பிரிவிற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூவிற்கு நிகரான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதத்தைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.



டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிக்க ஏரோனாடிகல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். என்னென்ன பாடங்கள் படித்திருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இருப்பதால் இந்தப் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் முழு விபரங்களையும் இணைய தளத்தில் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



கிரவுண்ட் டியூடி பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பையோ, பி.காம்., படித்தவராக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சியோ, அல்லது எம்.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற படிப்புகளை முடித்தவராக இருந்தால் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சியோ அல்லது எம்.எஸ்.சி., கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், சுற்றுச் சூழல் அறிவியல், ஜியோபிசிக்ஸ், என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற படிப்புகளை முடித்தவராக இருந்தால் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியோ தேவைப்படும்.



உடல் தகுதி
பிளையிங் பிரிவிற்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 162.5 செ.மீ., உயரமும், இதற்கு இணையான எடையும் தேவை. கிட்டப் பார்வை கண் குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது. டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 167.5 செ.மீ., உயரமும், இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும்.



தேர்ச்சி முறை
விமானப் படையின் மேற்கண்ட பிரிவுகளுக்கு 27.03.2011 அன்று நடத்தப்படும் விமானப் படை பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே தேர்ச்சி இருக்கும். இந்த நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, சூலூர்கோவை, தஞ்சாவூர் ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிப்பது எப்படி
இந்திய விமானப் படையின் குறுகிய கால நிலை அதிகாரிப் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை எதிர்வரும் 22.02.2011 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கே தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.



சென்னை மையத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கான முகவரி:
Command Education Officer,
HQ Training Command, IAF,
JC Nagar PO Hebbal,
Bengaluru - 680006
Karnataka.



தஞ்சாவூர் மற்றும் கோவை மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கான முகவரி:
Command Education Officer,
HQ Souther Air Command, IAF,
Thiruvananthapuram - 695031,
Kerala.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us