தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாய ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள்

விவசாய ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள்

விவசாய ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள்


UPDATED : பிப் 09, 2011 12:00 AM

ADDED : பிப் 09, 2011 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2011 12:00 AM ADDED : பிப் 09, 2011 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் (ஐ.ஏ.ஆர்.ஐ.,) புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் முக்கியமான அமைப்பாகும்.


இந்தியாவில் விவசாயத் துறையில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களுக்கும் இந்த மையத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் முக்கியக் காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம். இந்த மையத்தில் டெக்னிகல் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி3, பிரிவு 2 டெக்னிகல் அஸிஸ்டென்ட் பிரிவில் மட்டும் மொத்தம் 23 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


வயது வரம்பு: டி3, பிரிவு 2 டெக்னிகல் அஸிஸ்டென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: ஐ.ஏ.ஆர்.ஐ.,யின் டெக்னிகல் அஸிஸ்டென்ட் பிரிவு 2 பதவிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி., அக்ரிகல்சர் அல்லது இதற்கு இணையான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ஐ.ஏ.ஆர். ஐ.,யின் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.750/க்கான டி.டி.,யை "Director, I.A.R.I" என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.


விண்ணப்பிப்பது எப்படி?: இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் வயது, கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் போன்றவற்றின் அட்டெஸ்ட் செய்த நகல்களையும் இணைக்க வேண்டும்.


விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். இந்தப் பதவி குறித்த முழு விபரங்கள் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 28.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி:
Senior Administrative Officer, (P & II & PV),
Directors Office,
Indian Agricultural Research Institute (IARI),
New Delhi - 110 012.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us