தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வன ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகளுக்கு தயாராகுங்கள்

வன ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகளுக்கு தயாராகுங்கள்

வன ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகளுக்கு தயாராகுங்கள்


UPDATED : பிப் 14, 2011 12:00 AM

ADDED : பிப் 14, 2011 03:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2011 12:00 AM ADDED : பிப் 14, 2011 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ள டெஹ்ராடூன் வன ஆராய்ச்சி கல்வி நிறுவனம், பலவித எம்.எஸ்சி படிப்புகள் மற்றும் வேறுபல படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பங்களை வரவேற்கிறது. மே மாதம் 8 ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது.


படிப்பு விவரங்கள்:


படிப்பு - எம்.எஸ்சி-காடு வளர்ப்பு


தகுதி - தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், விலங்கியல், விவசாயம் மற்றும் காடு வளர்ப்பு போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


படிப்பு - மர அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


தகுதி - இயற்பியல், கணிதம், வேதியியல் மற்றும் காடுவளர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


படிப்பு - சுற்றுப்புற மேலாண்மை


தகுதி - காடுவளர்ப்பு அல்லது விவசாயத்தில் பி.எஸ்சி, அல்லது சுற்றுப்புற அறிவியலில் பி.இ. அல்லது பி.டெக். போன்ற படிப்புகளில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


படிப்பு - இயற்கை வள மேலாண்மையில் ஒரு வருட முதுநிலை படிப்பிற்கு பிந்தைய டிப்ளமோ


தகுதி - ஏதாவது ஒரு பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி படிப்பு


மேற்கண்ட அனைத்து படிப்புகளுக்கும் எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதுமானது.


விண்ணப்பித்தல்:


விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் புல்லட்டின்கள் www.fri.icfre.gov.in என்ற வலைதளத்தில் கிடைக்கும். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை பெறும் கடைசித் தேதி ஏப்ரல் 1. வரும் மே 8 ம் தேதி நடக்கும் நுழைவுத்தேர்வுகள் கோயம்புத்தூர், பெங்களூர், டெல்லி, டெஹ்ராடூன், ஜபல்பூர், கொல்கத்தா, சண்டிகர், லக்னோ, ஜோத்பூர், சிம்லா, ராஞ்சி மற்றும் ஜோர்ஹாட் ஆகிய இடங்களில் நடைபெறும்.


வனவிலங்கு அறிவியல் படிப்பு:


டெஹ்ராடூனின் இந்திய வனவிலங்குகள் கல்வி நிறுவனம், ஜூன் மாதம் துவங்கவிருக்கும் வனவிலங்கு அறிவியலுக்கான முழுநேர எம்.எஸ்சி படிப்பிற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.


இந்த படிப்பு குஜராத்திலுள்ள சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, மார்ச் 27 ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளின் மூலம் நடைபெறும். அதன்பிறகு தனி திறனாய்வு தேர்வும் நடைபெறும்.


தகுதி - உயிரியல், கால்நடை அறிவியல், காடு வளர்ப்பு, விவசாயம் அல்லது சுற்றுப்புற அறிவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றில் மொத்தமாக 55% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிப்பவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு - பொது பிரிவினருக்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி வரையான காலத்தில் 25 வயது இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்ககூடாது. ஆனால் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் கூடுதலாக விலக்கு உண்டு.


இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை www.wii.gov.in என்ற வலைதளத்தில் பெறலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.300. ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 21 கடைசித் தேதி. தபாலில் அனுப்புவதற்கு பிப்ரவரி 28 கடைசித் தேதி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us