தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பங்க் அடிக்கலாம் பயமில்லாமல்

பங்க் அடிக்கலாம் பயமில்லாமல்

பங்க் அடிக்கலாம் பயமில்லாமல்


UPDATED : பிப் 15, 2011 12:00 AM

ADDED : பிப் 15, 2011 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2011 12:00 AM ADDED : பிப் 15, 2011 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆறு வயது குழந்தையிடம் "சாக்லெட்' சாப்பிடாதே என்றால் சொன்னபடி கேட்குமா? அது போல் தான், "வகுப்புக்கு "கட்' (பங்க்) அடிக்காதீங்க' என்று சொல்வதும். இருந்தாலும், ஒவ்வொரு செமஸ்டருக்கும், குறிப்பிட்ட நாட்களுக்கு கட்டாயம் "அட்டெண்டென்ஸ்' இருக்க வேண்டும் என்பது விதிமுறை. வகுப்புக்கும் செல்ல வேண்டும்; தேவைப்பட்டால் "கட்' அடிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களுக்காகவே ஒரு சாப்ட்வேரை கண்டுபிடித்திருக்கிறார் தஞ்சாவூர் "சாஸ்திரா' பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் சஞ்சீவ் கோபிநாத்.


தற்போது பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது கண்டுபிடிப்பை, "இன்டெலிஜென்ட் அட்டெண்டென்ஸ் மேனேஜர்' என அழைக்கிறார். இந்த சாப்ட்வேரை மொபைல் போனில் ஏற்றி விட்டால், எப்போதெல்லாம் வகுப்புக்கு செல்ல வேண்டும்; எந்தெந்த வகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது; எத்தனை நாள் வகுப்புக்கு சென்றால் 85 சதவீத "அட்டெண்டென்ஸ்' கிடைக்கும் என தெரிந்து விடும். செமஸ்டர் அட்டவணையையும் இதில் பதிவு செய்யலாம்.


வகுப்புக்கு செல்ல முடியாத போதெல்லாம் மொபைல் போனில் "அப்டேட்' செய்ய வேண்டும். "அலர்ட்' செய்வது, எச்சரிப்பது, மொத்த "சம்மரி' போன்றவையும் இதில் கிடைக்கும். உதாரணமாக 50 சதவீதத்திற்கும் குறைவான "அட்டெண்டென்ஸ்' இருந்தால், ஒரு மண்டை ஓடு படம் வந்து எச்சரிக்கும்.


கோபிநாத் கூறும்போது, ""கல்லூரியில் படிக்கும் போது தான், இந்த கண்டுபிடிப்பு பற்றிய சிந்தனை வந்தது. இரவு முழுவதும் ஏதாவது "புராஜெக்ட்' பணியில் தீவிரமாக இருந்துவிட்டு, காலை 7 மணிக்கு தான் தூங்கவே செல்வோம். உடனே 8 மணிக்கு வகுப்புக்கு செல்ல முடியாது. அப்போது தான் இந்த சாப்ட்வேர் எண்ணம் தோன்றியது. இது இருந்தால், "அட்டெண்டென்ஸ்' பற்றிய கவலை இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்தலாம்.


ஒவ்வொரு முறையும் மாணவன் வகுப்பறைக்குள் நுழையும்போதும், தானாகவே "சாப்ட்வேர் "அப்டேட்' செய்துகொள்ளும் வகையில், "ஜி.பி.எஸ்.,' வசதியையும் மொபைல் போனில் ஏற்படுத்த முயற்சிக்கிறேன். நூலகத்தில் எடுக்கப்படும் புத்தக விபரங்கள், கல்லூரி, ஹாஸ்டலுக்கு பணம் செலுத்திய விபரங்கள் போன்றவற்றையும் சாப்ட்வேரில் கொண்டு வருவேன்,'' என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us