தொடர்ந்து சரியும் ஆஸி., செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை
தொடர்ந்து சரியும் ஆஸி., செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை
UPDATED : பிப் 17, 2011 12:00 AM
ADDED : பிப் 17, 2011 02:17 PM
ஆஸ்திரேலியாவில் கடந்த 2009 வரை வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக சீனா மற்றும் இந்திய மாணவர்கள் படிப்பதற்காக கணிசமான அளவில் வந்து கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த இனவெறித் தாக்குதல், விசா கெடுபிடிகள் அதிகரிப்பு இவற்றால் அவர்களின் வருகை கணிசமான அளவில் குறைந்து விட்டது.
அதேநேரம், அமெரிக்கா, பிரிட்டனை நோக்கி இம்மாணவர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதே நிலை நீடித்தால், 2015ல் வெளிநாட்டு மாணவர்களின் வரத்து 30 சதவீதமாகக் குறைந்து விடும்; அதனால் 36 ஆயிரம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று பல்கலைக்கழகங்கள் கடந்தாண்டு எச்சரித்திருந்தன.
அவர்கள் கூறியபடி, இந்திய மாணவர்களின் மீதான இனவெறித் தாக்குதல், படிப்புச் செலவு உயர்வு, ஆஸி., கரன்சியின் மதிப்பு உயர்வு போன்ற பிரச்னைகளால் கடந்தாண்டில், இந்திய மாணவர்கள் அங்கு செல்வதில் 50 சதவீதம் குறைந்து விட்டது. ‘வெளிநாட்டு மாணவர்களின் வருகை ஆஸி.,யில் குறைந்ததற்கு காரணம். ஆஸி., அரசின் குறுகிய மனப்பான்மை, தொலைநோக்கின்மை தான்’ என்றனர் நிபுணர்கள்.
