தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு அறிவிப்பை நம்பி உருவான கல்லூரிகள் மூடப்படும் அபாயம்

அரசு அறிவிப்பை நம்பி உருவான கல்லூரிகள் மூடப்படும் அபாயம்

அரசு அறிவிப்பை நம்பி உருவான கல்லூரிகள் மூடப்படும் அபாயம்


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பின்தங்கிய மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணங்களை வழங்குமென தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியால், கல்வி நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆந்திர அரசு சிக்கியுள்ளது. கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தாத பட்சத்தில், கல்லூரிகளை மூடி விட பல கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.


ஆந்திராவில், 2009ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி, பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்குமென தெரிவித்திருந்தார். மேலும், தேர்தல் அறிக்கையிலும் இது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்பால் ஆங்காங்கே சின்னச் சின்ன கல்லூரிகள் காளான்கள் போல் முளைத்துவிட்டன.


அதில், ஏராளமான மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஏறக்குறைய 25 லட்சம் பின்தங்கிய மாணவர்கள் அரசின் இந்த அறிவிப்பையடுத்து, பல்வேறு கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த வகையில் கல்லூரி நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை ஆந்திர அரசு தர வேண்டும்.


இந்த வகையில், நடப்பு நிதியாண்டில் 3,792.92 கோடி ரூபாய் அவ்வாறு செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை சேர்க்கும் பட்சத்தில் 5,976.30 கோடி ரூபாய் நிலுவையில்  உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் அரசு தரப்பில் கல்வி நிறுவனங்களுக்கு 2,287.27 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


கல்லூரிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாத காரணத்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், கட்டணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியது. இது, மாநில அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தொகையை செலுத்த மூன்று மாதம் அவகாசம் கேட்டிருந்த மாநில அரசின் வேண்டுகோளையும் கோர்ட் நிராகரித்து விட்டது.


அத்துடன், கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, 600 கோடி ரூபாயை வழங்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், மொத்தமுள்ள 4 ஆயிரம் கோடி ரூபாயில், 50 சதவீதத்தையாவது மாநில அரசு செலுத்த வேண்டுமென, கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துவிட்டன. அதுபோல், கல்லூரிகளுக்கு, வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தரவும் மாநில அரசு வழங்கிய மாற்று வழியையும் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்கவில்லை.


இது குறித்து மாநில சமூக நலத்துறை அமைச்சர் சத்யநாராயணன் கூறுகையில், கடுமையான நிதி நெருக்கடியால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. எப்படியும் இம்மாத இறுதிக்குள் இதை சரிகட்டி விடுவோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us