தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊனமுற்றோர் கல்வி பயிற்சிக்காக புதிய மையம்

ஊனமுற்றோர் கல்வி பயிற்சிக்காக புதிய மையம்

ஊனமுற்றோர் கல்வி பயிற்சிக்காக புதிய மையம்


UPDATED : பிப் 19, 2011 12:00 AM

ADDED : பிப் 19, 2011 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2011 12:00 AM ADDED : பிப் 19, 2011 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி ஆசிரியர்களுக்கு, ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி சம்பந்தமாக பயிற்சி அளிக்கும் பொருட்டு, ஒரு பயிற்சி மையத்தை தனது வளாகத்தில் இக்னோ ஆரம்பித்துள்ளது.


இந்த திட்டத்தின்படி, நாடுமுழுவதும் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் பயிற்சியளிக்க, இக்னோவின், ஊனமுற்ற படிப்புகளுக்கான தேசிய மையம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த பயிற்சியானது, ஊனமுற்ற குழந்தைகளின் கல்வி சம்பந்தமான அடிப்படை படிப்பு என்ற திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதிலுமுள்ள இக்னோவின் 100௦௦ சிறப்பு மையங்களின் மூலம் தியரியுடன் கூடிய பிராக்டிகல் மற்றும் அனுபவ பயிற்சி வழங்கப்படும். அந்த 100௦௦ சிறப்பு மையங்களும் இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டவை.


சில மாநில அரசுகள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குகின்றன. இந்த பயிற்சியானது தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் வரும் ஜூன் மாதம் முதற்கொண்டு கூடுதலாக 9 மாநில மொழிகளிலும் இந்த பயிற்சி நடத்தப்படும். மேலும் இந்த பயிற்சியை ஆன்லைனில் வழங்கவும் இக்னோ திட்டமிட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.


 


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us